Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடலில் உள்ள வலிகள் 10 நிமிடத்தில் பறந்து போக இதோ இப்படி ஒத்தடம் கொடுங்க!!

#image_title

உடலில் உள்ள வலிகள் 10 நிமிடத்தில் பறந்து போக இதோ இப்படி ஒத்தடம் கொடுங்க!!

நம் உடலில் ஏற்படும் கழுத்து வலி, கை வலி, கால் வலி, குதிகால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை குணப்படுத்த பலவிதமான சிகிச்சை முறைகளை எடுத்திருப்போம். பலவிதமான மருந்துகளை சாப்பிட்டும் பயன் இல்லாமல் போயிருக்கும். இந்த வகையான வலிகளை என்ன மருந்தை தயார் செய்வது எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

நமக்கு ஏற்படும் கை வலி, கால் வலி, கழுத்து வலி போன்ற பலவலிகளை குணப்படுத்த நாம் ஒரு ஒத்தடம் தான் கொடுக்கப் போகிறோம். இந்த ஒத்தடத்தில் ஆமணக்கு விதைகளை வைத்துத்தான் செய்ய போகிறோம்.

 

இதை செய்ய தேவையான பொருட்கள்…

 

* ஆமணக்கு விதைகள்

* விளக்கெண்ணெய்

 

இதை எவ்வாறு செய்வது…

 

ஆமணக்கு ஒத்தடம் கொடுக்க முதலில் ஆமணக்கு காய்களை எடுத்து அதிலிருக்கும் விதைகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்றவைத்து வாணலி பாத்திரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தில் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த விளக்கெண்ணெய் சூடாவதற்கு முன்பே இதில் இந்த ஆமணக்கு விதைகளை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடாகிவிட்டால் புகைய ஆரம்பிக்கும் என்பதால் சூடாவதற்கு முன்பே இந்த விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்கு இந்த விதைகளை வறுத்துக் கொள்ள வேண்டும். ஆமணக்கு விதைகளில் இருந்து புகை வரத்தொடங்கும் பொழுது இதை அடுப்பிலிருந்து இறக்கி கொள்ள வேண்டும்.

ஒரு காடா துணியை எடுத்து ஒரு தட்டின் மேல் விரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வறுத்து வைத்த இந்த ஆமணக்கு விதைகளை இந்த துணியில் போட்டு ஒத்தடம் கொடுக்கும் விதத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் எடுக்கக் கூடாது. விதைகளை மட்டும் அந்த துணியில் போட்டு நன்கு கட்டிக் கொள்ள வேண்டும்.

 

பிறகு இளஞ்சூடாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆமணக்கு விதையை அதுவது கட்டிவைத்துள்ள இந்த பையை ஆமணக்கு வறுத்த எண்ணெயில் தொட்டு எடுத்து வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இது கல்லடைப்பு காரணமாக ஏற்படும் வலியை குறைப்பது மட்டுமில்லாமல் அடிமுதுகு வலியையும் குறைக்கும். பெண்களுக்கு மாவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்பு வலியையும் இது முக்கியமாக குறைக்கும். இந்த வலிகளை மட்டுமில்லாமல் மூட்டு வலியையும் இந்த ஒத்தடம் குணப்படுத்தும்.

Exit mobile version