Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

#image_title

வீட்டில் அதிகமாக கண் திருஷ்டி இருந்தால் இப்படி செய்யுங்கள்..!!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது ;எல்லோருடைய ஆசையாக இருக்கும். பலன் இல்லாமல் கிடைக்காமல் இருக்கும், அதற்கு என்ன காரணம் என்றால் கண் திருஷ்டி தான்.

நம் வீட்டில் கெட்ட சக்திகள், கெட்ட எண்ணம் உடைய மனிதர்கள் தாக்கம் பாதிக்காமல் இருக்க வெள்ளிக்கிழமை வளர்பிறை அன்று கற்றாழை வீட்டு முன் கட்டி விடுங்கள்.

ஒரு எலுமிச்சை பழத்தை மஞ்சள் துணியில் கட்டி வீட்டு முன் கட்டி விடுங்கள். எலுமிச்சம் பழம் தீய சக்திகளை விரட்டி அடிக்கும்.

வாசலில் கற்றாழை, முள்ளு உள்ள ஒரு செடி, சப்பாத்திக்கள்ளி, மஞ்சள் ரோஜா செடிகளை வீட்டின் முன் கண்டிப்பாக கண் திருஷ்டிக்காக வைத்து வளர்க்க வேண்டும்.

வீட்டு வாசலுக்கு எதிராக கண் திருஷ்டி விநாயகர் படத்தை வைப்பதினால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கும்.

பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பு அறையில் வைக்கலாம்.

ஆகாச கருடன் கிழங்கை மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

எலுமிச்சையை அறுத்து ஒரு பகுதியில் குங்குமம், மற்றொரு பகுதியில் மஞ்சள் தடவியும் வைக்கலாம்.

வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து குளிப்பதினாலும் கண் திருஷ்டி நீங்கும்.

Exit mobile version