ரேஷன் அட்டையில் உடனே இதை செய்யுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்டங்கள் கிடைக்காது!! தமிழக அரசு போட்ட கறார்!!
ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டை இணைப்பது கட்டாயமென தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதை இணைத்தால் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் கிடைக்கும். பொதுவாக அரசு வழங்கும் ஊதியத்தொகை எனத் தொடங்கி சலுகை வரை அனைத்திற்கும் ஆதார் அட்டையை பயன்படுத்தி வருகிறோம்.
கட்டாயம் இவை இரண்டையும் இணைக்கும் பொருட்டு மேற்கொண்டு சலுகைகள் கிடைக்கும். அதேபோல ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்காவிட்டால் குறிப்பாக மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்கள் எதுவும் கிடைக்காமல் போகலாம். மத்திய அரசை விட மாநில அரசுதான் இவை இரண்டையும் ஒன்றிணைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அப்பொழுதுதான் மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்களும் மாநில அரசு வழங்கும் நலத்திட்டங்களும் பட்டியலிட்டு வழங்க முடியும்.
அதேபோல குறிப்பிட்ட நாட்களுக்குள் இணைக்காவிட்டால் மாநில அரசு அபராதம் விதிக்கவும் உத்தரவிட வாய்ப்புள்ளது. இதனையெல்லாம் தவிர்க்க ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மேற்கொண்டு மொபைல் மூலம் கூட இதன் இணைப்பு பணியை செய்து கொள்ளலாம்.
மொபைல் மூலம் இணைக்கும் பட்சத்தில் உங்களது செல்போனில் டி என் இ பி டி எஸ் TNEPDS என்ற ஆப் இறக்கி கொள்ள வேண்டும்.
பின்பு உங்களது ரேஷன் அட்டையின் எண் கேட்கப்படும்.
அதனை கொடுத்த பிறகு ஆதார் அட்டை எண் கேட்க்கும். அதனை கொடுத்ததும் உங்களது செல்போன் எண்ணிற்கு இருக்கு OTP வெரிஃபிகேஷன் அனுப்பப்படும். இதனை முறையாக கொடுத்தால் உங்கள் ஆதார் கார்டு ரேஷன் அட்டையுடன் இணைந்து விடும்.
செல்போனில் செய்ய முடியவில்லை என்றால் ஆஃப்லைன் வாயிலாக அருகிலிருக்கும் ரேஷன் கடையிலேயே இதனை செய்து கொள்ளலாம்.