Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

#image_title

குடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!

உடல் ஆரோக்கியத்திற்கு மூன்று வேலை உணவு மிகவும் அவசியம் ஆகும். ஆனால் இந்த இயந்திர உலகில் உணவு உண்ண கூட நேரம் இல்லாமல் பலரும் வேலை, பணம் என்று ஓடிக் கொண்டிருப்பதால் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடுகிறது.

இதனால் குடலில் புண் உண்டாகி அவை தாங்க முடியாத வேதனையை கொடுக்கின்றது. குடலில் புண் பாதிப்பு ஏற்பட்டால் வயிறு எரிச்சல், குமட்டல், மலம் கழிக்கும் பொழுது எரிச்சல் உணர்வு ஏற்படும். இதை சரி செய்ய 1 கிளாஸ் தேங்காய் பால் மட்டும் பயன்படுத்துங்கள்.

குடல் புண்ணை ஆற்ற தேவையான பொருட்கள்…

*தேங்காய் பால்

*கற்றாழை ஜெல்

*தேன்

செய்முறை:-

முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும். தேங்காய் நன்கு அரைபட்டு பாலாக வந்த பின்னர் அதில் 3 அல்லது 4 கற்றாழை ஜெல்லை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி சிறிது இந்துப்பு சேர்த்து காலை நேரத்தில் பருகவும். இவ்வாறு செய்யத் தொடங்கிய சில தினங்களில் குடலில் உள்ள புண்கள் அனைத்தும் ஆறிவிடும்.

Exit mobile version