Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்!

#image_title

மார்கழி மாத இறுதி வெள்ளிக் கிழமையில் இதை அவசியம் செய்யுங்கள்!

மார்கழி மாதம் என்றாலே பக்தி மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தலைக்கு குளித்து விட்டு கோயிலுக்கு சென்று வந்தால் சகல வித நன்மைகளும் உண்டாகும்.

வாழ்வில் ஏற்பட்டுள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி நன்மைகள் கிடைக்க மார்கழி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

வியாழக் கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்து வெள்ளிகிழமை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து கோலமிட்டு தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.

சாமி படங்களை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்யவும். முடிந்தவர்கள் கடவுளுக்கு உகந்த நெய்வேத்தியம் செய்து படைக்கலாம்.

பின்னர் பூஜை அறையில் அமர்ந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.

“ஓம் நமோ பகவதே வாசுதேவாய ஓம் நம சிவாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை மனதார 27 முறை உச்சரித்து வழிபட்டால் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும்.

இந்த வெள்ளிக்கிழமையில் மறக்காமல் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Exit mobile version