வெரிகோசை விரட்ட இதை 1 முறை மட்டும் செய்யுங்கள்!! 100% தீர்வு எளிமையான வீட்டு வைத்தியம்!!
உடலில் வீங்கி போன நரம்புகள் நீலம் அல்லது ஊதா நிறத்தில் காணப்படும்.நரம்புகளுக்குள் இருக்கின்ற வால்வுகள் பலவீனமடையும் பொழுது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்.இதனை வெரிகோஸ் வெயின் என்று அழைக்கிறார்கள்.பெண்கள்,வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வெரிகோஸ் வெயின் ஏற்படுவது பொதுவானது.
நரம்புகள் பருத்து வீங்கினால் அதிகமான வலி,அரிப்பு,தோல் புண் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.நீண்ட தூரம் நடப்பது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது போன்ற காரணங்களால் கால் நரம்புகள் வீங்கி வலியை உண்டாக்குகிறது.
வெரிகோஸ் வெயின் அறிகுறிகள்:
1)நீலம்,ஊதா நிறத்தில் பருத்த நரம்புகள்
2)நீண்ட நேரம் உட்காருதல் அல்லது நடத்தலின் போது வலி ஏற்படுதல்
3)நரம்புகள் மீது அரிப்பு
4)நரம்பு பிடிப்பு,நரம்பு வீக்கம்
வெரிகோஸ் வெயினை குணமாக்கும் எளிமையான பயிற்சிகள்:
*நடைபயிற்சி
தினமும் காலையில் 15 நிமிடங்களுக்கு நடந்தால் கால்களின் இரத்த ஓட்டம் சீரக இருக்கும்.இதனால் வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
*கால் பயிற்சி
தரை அல்லது நாற்காலியில் அமர்ந்து கால்களை மெதுவாக உயர்த்தி இறக்கி பயிற்சி செய்து வந்தால் நரம்புகள் வலுப்பெறும்.
*சைக்கிள் பயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் சிக்கிள் பயிற்சி செய்து வந்தால் கால்களின் இயக்கம் நன்றாக இருக்கும்.நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
*கணுக்கால் பயிற்சி
காலையில் சிறிது நேரம் கணுக்கால் பயிற்சி செய்து வந்தால் வெரிகோஸ் பாதிப்பு குணமாகும்.
வெரிகோஸ் வெயின் பாதிப்பு இருப்பவர்கள் செய்யக் கூடாத பயிற்சிகள்:
*எடை தூக்குதல்
கால் நரம்பு பருத்து போனவர்கள் எடை தூக்குதல் போன்ற கடுமையான உடற்பயிற்கள் செய்யக் கூடாது.
*அதிகம் ஓடுதல்
நீங்கள் தினமும் அதிக நேரம் ஒட்டப்பயிற்சி எடுப்பதை தவிர்க்கவும்.இதனால் பருத்த நரம்புகளில் வலி,வீக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.