Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த புதன்கிழமை இப்படி செய்யுங்க! அடுத்த புதனுக்குள் பணம் வரும்!

#image_title

வராத கடனை வசூலிக்கும் விதமாக இந்த புதன்கிழமை வெற்றிலையில் இதை தடவி செய்தால், அடுத்த புதனுக்குள் உங்களுக்கு பணம் வரவு வந்து சேரும்.

என்ன பரிகாரமானாலும் சரி, வெற்றிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையின் மூலம் நாம் செய்யும் எந்த பரிகாரமமும் கடவுளுக்கு நேரடியாக செல்லும் என ஒரு பொருள் உள்ளது.

 

வீட்டில் விசேஷம் இருக்கு, அதற்கான பணம் வர வேண்டிய இடத்திலிருந்து வரவேண்டும், ஆனால் தாமதமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த பணத்தை சீக்கிரம் வர வைக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால், இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்யலாம்.

 

தேவையான பொருட்கள்:

 

வெற்றிலை 3,

சுத்தமான பசு நெய் சிறிதளவு,

1 ரூபாய் நாணயம்,

சதுர வடிவில் சிறிய ஒரு பட்டு துணி,

 

செய்முறை:

 

பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு தாம்பல தட்டில் பட்டு துணியை விரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வெற்றிலையாக கையில் எடுத்து அந்த வெற்றிலைக்கு மேல் இந்த நெய்யை உங்கள் விரல்களால் தொட்டு தடவ வேண்டும். தடவும் போது உங்களுக்கு இருக்கும் குறிப்பிட்ட பணக்கஷ்டம் எதுவோ அதை நினைத்து, குலதெய்வத்தையும் நினைத்து அந்த பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு நெய்யை வெற்றிலையின் மேல் தடவுங்கள்.

மூன்று வெற்றிலைக்கு மேல் பக்கமும் நெய் தடவி விட்டு,

ஒவ்வொரு வெற்றிலையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து அடுக்கிக் கொள்ளுங்கள். மேலே மூன்றாவதாக இருக்கும் வெற்றிலைக்கு மேல் 1 ரூபாய் நாணயத்தை வைத்து, வெற்றிலையை அப்படியே சுருட்டி அந்த பட்டுத் துணியில் வைத்து மடித்து இந்த மூட்டையை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.

அடுத்த வாரம் புதன்கிழமை பழைய வெற்றிலையை எடுத்து, கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

ரூபாய் நாணயத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

Exit mobile version