Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தங்கள் ஆசைகள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்!

#image_title

தங்கள் ஆசைகள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யவும்!

ஒவ்வொரு மனிதனுக்கும் பல ஆசைகள் இருக்கும். நல்ல துணை கிடைக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும், நகை வாங்க வேண்டும், கை நிறைய சம்பளத்தில் வேலைக்கு செல்ல வேண்டும்.. என்று பல ஆசைகளை கொண்டிருக்கும் மனிதர்கள் அவை அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைப்பார்கள்.

இதில் ஒரு சில ஆசைகள் விரைவில் நடந்து விடும்… ஒரு சில ஆசைகள் நிறைவேற நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஒரு சில ஆசைகள் நிறைவேறாமல் கூட போகும். உங்களுடைய நியாமான ஆசைகள் நிறைவேறாமல் இருந்தால் இந்த பரிகாரம் செய்யுங்கள். நிச்சயம் தங்கள் ஆசை அனைத்தும் நிறைவேறும்.

இதற்கு முதலில் தலைக்கு குளித்து விட்டு உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். இதை பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டும். பூஜை அறைக்குள் ஒரு கிண்ணத்தில் கல் நிரப்பி கொள்ளவும். அதற்கு அடுத்து ஒரு அகலில் தீபம் ஏற்றிவிட்டு அமர்ந்து கொள்ளவும். பிறகு அந்த கல் உப்பை கையில் கொட்டி உப்பு கொட்டி வைத்துள்ள கை மேல் மற்றொரு கையை வைத்து மடக்கி கொள்ளவும். பிறகு தங்கள் ஆசைகள் அனைத்தையும் சொல்லி… விரைவில் நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை எந்த கிழமையிலும் செய்யலாம். இவ்வாறு செய்தால் நிச்சயம் தங்கள் ஆசை நிறைவேறும்.

Exit mobile version