நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் 3 வாரங்களில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

0
341
Do this remedy to pay off all your debt in 3 weeks!

நீங்கள் வாங்கிய கடன் அனைத்தும் 3 வாரங்களில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

இன்றைய உலகில் கடன் இல்லாத மனிதர்களை பார்ப்பது அரிது. திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த தெரியாதவர்கள் கடனில் சிக்கி விடுகின்றனர். எதிர்பாராத செலவிற்கு கடன் வாங்க ஆரம்பித்து தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்கி வாழ்க்கையை ஓட்டி வரும் மனிதர்கள் ஏராளம்.

ஒரு சிலர் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தவறான பாதையை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். எதிர்பாராத செலவிற்கு கடன் வாங்கும் பொழுதே அதை அடைப்பதற்கான வழியை யோசித்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை கடனில் மூழ்கிவிடும்.

இவ்வாறு கடன் வாங்கி அடைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி கொண்டிருக்கும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை தொடந்து 3 வாரங்கள் செய்து வரவும்.

உங்கள் அனைவரது வீட்டு பூஜை அறையிலும் பிள்ளையார் படம் இருக்கும். அந்த படத்திற்கு பூ வைத்து மஞ்சள், குங்கும பொட்டு வைக்கவும்.

அடுத்து பிள்ளையார் உருவப்படத்திற்கு முன் ஒரு கொத்து மாம்பூவை வைத்து கடன் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். இந்த பரிகாரத்தை வாரத்தின் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். நீங்கள் எந்த நாளில் தொடங்குகிறீர்களோ.. அடுத்த இரு வாரங்களுக்கு அதே நாளில் தான் இந்த பரிகாரம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வழி பிறக்கும்.