Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

#image_title

வீட்டில் பண வரவு இரண்டு மடங்காக உயர இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

இந்த உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். கையில் பைசா இல்லை என்றால் ஒருவரும் நம்மை மதிக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் குறைந்தது 25% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இதனால் வாழ்க்கை இருளை நோக்கி நகர்ந்து விடும்.

நம் சம்பள பணம் கையில் வருவதற்கு முன் 1000 செல்வுகள் ரெடியாக காத்து கொண்டிருக்கும் பொழுது எங்கிருந்து சேமிக்கிறது. அடுத்த வேளை சோற்றுக்கே கஷ்டப்பட வேண்டியதாக இருக்கிறது என்று வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில ஆன்மீக வழிமுறைகளை கடைபிடித்தால் வீட்டில் பணக்கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க தொடங்கும்.

தேவையான பொருட்கள்:

*பித்தளை செம்பு

*தண்ணீர்

*பன்னீர்

*மஞ்சள் தூள்

*பச்சைக் கற்பூரம்

*கோமதி சக்கரம்

*சோழி

*ஏலக்காய்

*கிராம்பு

*5 ரூபாய் நாணயம்

*பூ

*வெள்ளை குன்றின் மணி

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு சிறிய காப்பர் அல்லது பித்தளை செம்பில் முக்கால் பாகம் தண்ணீர் மற்றும் கால் பாகம் பன்னீர் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து சிறிது மஞ்சள் தூள், சிறிது பச்சைக் கற்பூரம், 3 கோமதி சக்கரம், 3 சோழி, 3 தாமரை மணி, 3 வெள்ளை குன்றின் மணி, 3 ஏலக்காய், 3 கிராம்பு, 5 ரூபாய் நாணயம் ஒன்று மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களில் ஏதேனும் ஒரு வகை உள்ளிட்டவைகளை கழுவி அந்த பித்தளை செம்பில் போட்டுக் கொள்ளவும்.

இதை வெள்ளிக்கிழமை காலை 6 – 7 மணிக்குள் பூஜை அறையில் வைத்து வழிபடவும்.
பின்பு இதை அப்படியே எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் வட கிழக்கு மூலையில் வைத்து விடவும்.

மறு வெள்ளிக்கிழமை இதை அப்படியே எடுத்து தண்ணீரை மட்டும் செடியில் ஊற்றி விடவும். மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் தவிர மற்ற பொருட்கள் அதையே மீண்டும் பயன்படுத்தி இதே போல் செய்து வைக்கவும்.

தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வர பண வரவு இரட்டிப்பாகும்.

Exit mobile version