Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

#image_title

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் அனைவருக்கும் ஐயனார்,பெரியாண்டிச்சி,ஒண்டி வீரன்,இருசாயி என்று குலதெய்வம் இருக்கும்.நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நம் குலதெய்வத்தை வணங்கி விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும்.

எவர் ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கிறதோ அவரால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல சிந்தனைகள் உருவாக வேண்டும் என்றால் குலதெய்வத்தை தவறாமல் வணங்கி வர வேண்டும்.

குலதெய்வத்தை வழிபாடு செய்ய உகந்த நாள் அமாவாசை மாற்றும் பௌர்ணமி.ஆண் குலதெய்வமாக இருந்தால் அமாவாசை அன்றும் பெண் குலதெய்வமாக இருந்தால் பௌர்ணமி அன்றும் வழிபாடு செய்து வர வேண்டும்.

ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்தோம் என்றால் நம் குலத்திற்கே குலதெய்வ சாபம் வந்து சேர்ந்துவிடும்.குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம்.

நம் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றை அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று செய்து வர வேண்டும்.அதாவது தேங்காய் மூடியில் விளக்கு போட வேண்டும்.

குலதெய்வ கோயிலுக்கு சென்று ஒரு தேங்காய் மூடியை எடுத்து அதனை சுற்றி மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்துக் கொள்ளவும்.பிறகு அதில் நெய் ஊற்றி இரண்டு பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.பின்னர் குலதெய்வத்தை மனதார வணங்கவும்.

இவ்வாறு அமாவாசை அல்லது பௌர்ணமி அன்று செய்து வந்தால் நிச்சயம் குலத்தியவத்தின் அருள் கிடைக்கும்.

Exit mobile version