முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் 7 தினங்களில் மறைய இவ்வாறு செய்யுங்கள்..!!
முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், கருமை, தழும்புகள் உள்ளிட்டவை இருக்கக் கூடாது. ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை பழக்கத்தால் பெரும்பாலானோர் முகத்தில் பருக்கள் தோன்றி நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகிறது.
பச்சை பயறுடன் சில பொருட்களை கலந்து முகத்திற்கு பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
தேவையான பொருட்கள்:-
*பச்சை பயறு – 4 தேக்கரண்டி
*காய்ச்சாத பால் – 3 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
*உப்பு – 1 பின்ச்
செய்முறை…
ஒரு கிண்ணத்தில் 4 தேக்கரண்டி பச்சை பயறு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.
மறுநாள் காலையில் அதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளவும். இந்த பச்சை பயறு பேஸ்டை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கொள்ளவும். அதனுடன் 3 தேக்கரண்டி காய்ச்சாத பால், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 பின்ச் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இதை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை நன்கு கழுவிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்தில் 2 முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாகவும், பொலிவாகவும் காணப்படும்.