வயிற்றில் உள்ள கழிவுகள் 5 நிமிடத்தில் சட்டென்ன வெளியேற இதை செய்யுங்கள்!! 100% தீர்வு நிச்சயம்!!
இன்றைய நவீன உலகில் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் பலவகை உணவுகள் வரிசையில் நிற்கிறது.காலையில் குடிக்கும் காபியில் இருந்து இரவு நேர உணவு வரை ஆரோக்கியமற்ற ஒன்றாக மாறிவருகிறது.எதிலும் கலப்படம்,செரிக்காத உணவுகள்,பயன்படுத்திய எண்ணெயில் சமைத்த உணவுகளை உட்கொள்வது போன்ற காரணங்கள் உடல் ஆரோக்கியம் கெடுகிறது.
குறிப்பாக வயிற்றின் ஆரோக்கியம் கேள்விக்குறியாக இருக்கிறது.செரிக்காத உணவுகளை உட்கொள்வதால் வயிறு உப்பசம்,வயிறு வீக்கம்,மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
அது மட்டுமின்றி வயிற்றுப்போக்கு,வயிறு எரிச்சல்,அல்சர் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது.இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும்,வயிற்றில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகள் வெளியேறவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.
தேவையான பொருள்கள்:-
*மிளகு
*சுக்கு
*சீரகம்
*ஓமம்
*வசம்பு
*இந்துப்பு
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 கிராம் சீரகம் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்களுக்கு வறுத்து ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.அதேபோல் 25 கிராம் மிளகு,25 கிராம் சுக்கு,25 கிராம் ஓமம் மற்றும் 25 கிராம் வசம்பை தனித்தனியாக வறுத்து அறவிடவும்.
பிறகு வறுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.அதன் பிறகு 10 கிராம் இந்துப்பு சேர்த்து நைஸ் பவுடராக்கி கொள்ளவும்.இந்த பவுடரை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கழிவுகள் மலம் வழியாக வெளியேறும்.