Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர இதை செய்யுங்கள்!!

#image_title

முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர இதை செய்யுங்கள்!!

பெண்களுக்கு நீளமான மற்றும் அடர்த்தியான முடி அவர்களின் அழகை இன்னும் அதிகரித்து காட்டும். ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

இந்த காலகட்டத்தில் முடியை பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால் மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வலிகளை பின்பற்றுகின்றனர். அதனால் பல்வேறு பக்க விளைவுகள் வருகிறது. மேலும் இயற்கை வழி தான் சிறந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

முடி உதிர்வதை தடுக்க கடைகளில் இருக்கும் எண்ணெய் மற்றும் ஷாம்புகளை வாங்கி உபயோகிக்காமல் இயற்கையாக தேங்காய் எண்ணெய் மற்றும் இயற்கையாக தயாரித்த சீயக்காய் போன்றவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை தடுத்து முடி நீளமாக வளர செய்யலாம்.
இது மட்டும் முடி வளர்வதற்கு போதுமானதாக இருக்காது. இதனுடன் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை உட்கொள்வதன் மூலம் தான் சிறந்த பலன்களை பெற முடியும்.

தேவையான பொருட்கள்:

*கருவேப்பிலை

*மலை நெல்லிக்காய்

பயன்படுத்தும் முறை:

கருவேப்பிலை 10-20 இலை மற்றும் இரண்டு மலை நெல்லிக்காய் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு டம்ளர் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இந்த பானத்தை வடிகட்டி அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் காலையில் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து குடித்து வருகையில் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர்வதை காண்பீர்கள்.

Exit mobile version