Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

#image_title

குடலில் இறுகி போன நாள்பட்ட கெட்டி மலம் இளகி முந்தியடித்துக் கொண்டு வெளியேற இப்படி செய்யுங்கள்!

தற்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மலச்சிக்கல் பாதிப்பு இருக்கின்றது. மலச்சிக்கலை சாதாரண ஒன்றாக கருதி கவனிக்கலாம் விட்டோம் என்றால் பைல்ஸ், ஆசனவாயில் வீக்கம், ரத்த போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு விடும்.

மலச்சிக்கல் பிரச்சனையை வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்பு, பசியின்மை, குமட்டல் உணர்வு, உள்ளிட்டவைகளை வைத்து அறிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கலை சரி செய்ய வீட்டு வைத்தியம்…

தேவையான பொருட்கள்:-

1)உலர் திராட்சை

2)ஆமணக்கு எண்ணெய்

3)எலுமிச்சை

செய்முறை…

*ஒரு கிண்ணத்தில் 10 உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி முந்தின நாள் இரவு ஊற விடவும்.

*மறுநாள் அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகவும். இவ்வாறு செய்தால் குடலில் அடைபட்டு கிடந்த மலம் முழுவதும் இளகி வெளியேறி விடும். இந்த பானத்தை மாதம் ஒருமுறை செய்து பருகி வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Exit mobile version