Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிள்ளைகள் நன்றாக படிக்கவும், படிப்பில் ஆர்வம் காட்டவும் இதனை செய்து பாருங்கள்!! கண்டிப்பாக பலன் கிடைக்கும்!!

Do this to make children study well and show interest in studies!! Will definitely get results!!

Do this to make children study well and show interest in studies!! Will definitely get results!!

கல்விக்கு உரிய கடவுள் சரஸ்வதி தேவி என்பதுதான் நாம் அனைவரும் அறிந்திருந்த ஒன்று. ஆனால் கல்விக்கு உரிய மற்றொரு கடவுளும் உள்ளார். அவர்தான் ஹயக்ரீவர். அந்தக் கடவுள் நாம் நினைத்ததை நினைத்தபடி கொடுக்கக் கூடியவர் ஆவார். நமது குழப்பமான நேரங்களில் எந்த முடிவினை எடுப்பது என தெரியாமல் இருக்கக்கூடிய சூழலில் நமக்கு உதவி புரிபவரும் இந்த ஹயக்ரீவர் தான்.
எம்பெருமான் நாராயணனின் ரூபமாக தான் இந்த ஹயக்ரீவர் இருக்கிறார். மக்கள் அனைவரையும் படைக்கக்கூடிய பிரம்ம தேவரின் வேதங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றி தந்தவரும் இந்த ஹயக்ரீவர் தான். மேலும் இந்த வேதங்களில் உள்ள சந்தேகங்களையும், சரஸ்வதி தேவியாரின் சந்தேகங்களையும் தீர்ப்பவராகவும் இந்த ஹயக்ரீவர் திகழ்கிறார். இத்தனை பெருமைகளுக்கும் உரிய ஹயக்ரீவர் தான் கல்விக்கும் உரியவராக இருக்கிறார்.
இவர் ஹயக்ரீவர் ஆகவும் லக்ஷ்மி ஹயக்ரீவர் ஆகவும் திகழ்கிறார். இதில் ஹயக்ரீவர் வழிபாடு என்பது கல்விக்கான பலன்களை தரக்கூடியவர். லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு என்பது செல்வம் மற்றும் கல்விக்கான பலன்களை தரக்கூடியவர்.
பொதுவாக பௌர்ணமி என்பது சிறப்பிற்குரிய நாள் என்பது நாம் அனைவரும் அறிவோம். ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி நாளன்று காலை 6 மணி அல்லது மாலை 6 மணி, நம்மால் எப்பொழுது முடியுமோ அப்பொழுது இந்த வழிபாட்டினை செய்து கொள்ளலாம். ஹயக்ரீவர் படம் நமது வீட்டில் வைத்திருந்தால் அந்த படத்திற்கு ஏலக்காயில் செய்யப்பட்ட மாலையை போட்டு வழிபடுவது மிகவும் சிறப்பிற்கு உரியது. ஹயக்ரீவர் படம் இல்லை என்றால் பெருமாள் படத்தினை வைத்தும் வழிபாடு செய்து கொள்ளலாம்.
வழிபாட்டின் போது விளக்கினை ஏற்றி ஹயக்ரீவர் அல்லது பெருமானுக்கு ஏலக்காய் மாலை சாட்டி, பசும்பாலினை காய்ச்சி அதில் ஏலக்காய் பொடியை தூவி அதனை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். துளசியை கொண்டு அர்ச்சனை செய்து, தீப ஆராதனை காட்டி ஹயக்ரீவர் மந்திரத்தினை சொல்லி வழிபாடு செய்வது குழந்தைகளின் கல்வியில் சிறந்த பலனை கொடுக்கும்.
இந்த மந்திரத்தினை நமது குழந்தைகளையும் சொல்ல வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது குழந்தைகளின் படிப்பில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் ஞாபகம் இன்மையை அகர்த்தி ஒரு நல்ல பலனை கொடுக்கும்.

ஹயக்ரீவர் மூல மந்திரம் :

உக்தீக ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய

ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் :

ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!

ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடிய செல்வம் கல்வி தான். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.

Exit mobile version