இன்றைக்கு வியாழக்கிழமை குருபகவானின் நல் ஆசி பெற இதை செய்யுங்க!.
இன்று வியாழக்கிழமை ஆதலால் குரு பகவானுக்கு மிகவும் உகந்த நாளாக வியாழக்கிழமை கருதப்படுகிறது.
ஒருவரின் ஜாதகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அதை உடனடியாக தீர்த்து வைக்கும் பணியை குருபகவான் செய்வார். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.
அந்தந்த குரு பெயர்ச்சி காலத்தில் பக்தர்களாகிய நீங்கள் பல்வேறு வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்து வந்தால் அவர் உங்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்.
குருபகவானின் வழிபாட்டு முறை:
1. உங்கள் வீட்டினில் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்குள்ள நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை போட்டு வணங்குங்கள். சுபிக்ஷம் வீடு தேடி வரும்.
2. குரு பகவானுக்கு மிகவும் உகந்த நிறம் மஞ்சள் எனவே அவருக்கு மஞ்சள் பட்டாடை உடுத்தி வழிபட்டால் உங்களுக்கு சௌகரியம் இருக்கும். துயரம் மறையும். துன்பம் நீங்கி இன்பம் பொங்கும்.
3. வியாழக்கிழமைகளில் காலையில் விரதம் இருந்து சிவன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடும் போது சகல பாக்கியமும் பெறுவீர்கள்.
4. வியாழக்கிழமைகளில் சுண்டல் செய்து தட்சிணாமூர்த்திக்கு படைத்துவிட்டு ஏழை எளிய மக்களுக்கு தானம் வழங்குங்கள்.
5. ஒரு ஏழை பெண்கள் பிரசவ செலவை நீங்கள் ஏற்கும் பொழுதும் ஒரு சிறுவனின் கல்வி செலவை நீங்கள் ஏற்கும் பொழுதும் குருவின் நல்லாசி உங்களுக்கு பரிபூரணமாக கிட்டும்.
6. வியாழக்கிழமைகளில் மாலை தீபம் ஏற்றி 108 முறை குருபகவான் துணை என்று சொல்லும் பொழுது மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவு பெறும்.
7. அவரின் வாகனம் யானை என்பதால் கோவிலில் உள்ள யானைகளுக்கு வாழைப்பழம் கரும்பு முதலியவற்றை கொடுக்கலாம்
8. அவருக்கு பிடித்த நிறமான மஞ்சள் நிற ஆடைகளை ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்யுங்கள்.
இவ்வாறு குருபகவானை வணங்குவதால் அவரது பரிபூரண நல்லாசி உங்களுக்கு விரைவில் வந்தடையும்.