இதை செய்யவில்லை என்றால் உங்கள் பதவி காலி! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை போட்ட சைலேந்திரபாபு!

0
158

தமிழகத்தில் பல காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்தனர், இதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். ஆனாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.

தொடர்ந்து இப்படி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து வந்தது மத்திய ,மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்து வந்தது. ஆகவே பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோரை பாதுகாக்கும் விதத்தில் போக்சோ சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் இந்த போக்சோ சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கூட இன்று வரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும், போக்சோ வழக்குகளை கையாள்வது குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, அதே நேரம் இன்னொருபுறம் சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இருந்தாலும் குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை. இந்த வரிசையில் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வழக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த கூட்டத்தின் மூலமாக பல தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதனடிப்படையில் போக்சோ வழக்குகளை விசாரணை அதிகாரிகள் எப்படி கையாள வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனராக இருக்கும் சைலேந்திர பாபு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் போக்சோ சட்டத்திற்கு கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். அத்துடன் எனக்கும் அது தொடர்பான ஆவணங்களை அனுப்பவேண்டும், அதேபோல விசாரணை அதிகாரிகள் 164 கிரிமினல் சட்டத்தின் அடிப்படையில் தேவைப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறுவர்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு பதிவு செய்யும் பட்சத்தில் காவல் துறையைச் சார்ந்த புகைப்பட கலைஞர்கள் மட்டுமே அதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என கூறியிருக்கிறார் சைலேந்திரபாபு.

அதேபோல போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதில் பாதிப்படைந்தவர்கள் அல்லது பாதிப்படைந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு வாங்கிக் கொள்ளலாம் என்ற விவரத்தையும் அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் மேற்கண்ட இந்த அறிவிப்புகளை பின்பற்றாத விசாரணை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.