Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் தினமும் 50 படிகள் ஏறுபவர்களா!!? அப்போ உங்களுக்கு இந்த நோய் வராது!!!

#image_title

நீங்கள் தினமும் 50 படிகள் ஏறுபவர்களா!!? அப்போ உங்களுக்கு இந்த நோய் வராது!!!

நாம் தினமும் 50 படிக்கட்டுகள் கண்டிப்பாக ஏறுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏன் தினமும் 50 படிக்கட்டுக்கள் ஏற வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் தினமும் 50 படிக்கட்டுகள் ஏறுவதால் உங்களுக்கு உயிரைக் பறிக்கும் நோயான மாரடைப்பு என்பது வராது என்று ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது தினமும் நாம் 50 படிக்கட்டுகள் ஏறுவதால் இதய நோயின் அபாயம் குறைகின்றது.

மேலும் இதய நோய் உள்ளவர்களும் தினமும் 50 படிக்கட்டுகள் ஏறினால் அவர்களுக்கும் இதய நோய் தொடர்பான அபாயம் குறைக்கப்படுகின்றது. எனவே இதய நோய் இருப்பவர்களும் தினமும் 50 படிக்கட்டுகள் ஏறி பாருங்கள் மாற்றம் தெரியும்.

30 வயது நமக்கு ஆகிவிட்டால் நாம் முதலில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மருத்துவர்கள் கூறும் ஆலோசனையை பெற்று அதன்படி நடக்க வேண்டும். முக்கியமாக இதய நோய் உள்ளவர்கள் அனைவரும் மருத்துவர்களின். ஆலோசனையை பின்பற்ற வேண்டும்.

தினமும் 50 படிக்கட்டுகள் ஏறுவது உடலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமையும். ஒரு பொது இடத்திற்கு சென்றால் அங்கு லிப்ட் பயன்படுத்தாமல் மெதுவாக படிக்கட்டுகள் பயன்படுத்தி ஏற வேண்டும்.

தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள விட 50 படிக்கட்டுகள் ஏறலாம். நாம் படிக்கட்டுகள் ஏறும் பொழுது இதயத்தில் உள்ள தசைகள் வலிமை பெறுகின்றன. இதனால் இதய நோய் அபாயம் குறைகின்றது. மேலும் மாரடைப்பு என்பது ஏற்படும் அபாயம் குறைகின்றது. நடைப்பயிற்சி மேற்கொள்வதை விட படிக்கட்டுகள் ஏறுவதால் நமக்கு பலன்கள் மூன்று மடங்கு அதிகமாக கிடைக்கின்றது.

படிக்கட்டுகள் ஏறினால் கிடைக்கும் நன்மைகள்

* தினமும் படிக்கட்டுகள் ஏறினால் நம் உடலில் தங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையத் தொடங்கும்.

* படிக்கட்டுகள் பயன்படுத்துவதால் நம்முடைய ஆயுட்காலத்தை அதிகரிக்கின்றது.

* முன்பு கூறியதை போல இதயத்தை இரும்பு மாதிரி பலப்படுத்தி இதய நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றது.

* தினமும் படிக்கட்டுகள் ஏறுவது மன நலத்திற்கும் நல்லது என்று கூறப்படுகிறது.

* உடலை ஃபிட்டாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் படிக்கட்டுகளை ஏறுவதை பழக்கமாக்கி கொள்ளுங்கள்.

* நாம் படிக்கட்டுகள் பயன்படுத்துவது நமது நுரையீரலுக்கு நல்லது. நாம் படிக்கட்டுகள் ஏறும்பொழுது நமக்கு மூச்சு வாங்கும். அப்பொழுது ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கின்றது. இந்த அதிகரிக்கும் ஆக்சிஜன் நுரையீரலுக்கு செல்லும் பொழுது நுரையீரலின் வலிமை கூடுகின்றது.

* படிக்கட்டுகள் ஏறினால் உடலில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற உடல் வலிகள் குறைகின்றது.

Exit mobile version