Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் கோபத்தை கன்ட்ரோல் பண்ணுறீங்களா? இனி இப்படி பண்ணாதீங்க.. இந்த உறுப்பு டேமேஜ் ஆகிடும்!!

மனிதர்கள் மட்டுமின்றி இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் கோபம் என்பது இயல்பான விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது.சிலர் தங்கள் கோபத்தை அடக்கி வைக்க முடியாமல் கத்தி வெளிப்படுத்தி விடுகின்றனர்.ஆனால் ஒருசிலர் என்ன நிலை வந்தாலும் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்கின்றனர்.கோபத்தை அடக்கி பொறுமை காப்பதுநல்ல விஷயம் என்றாலும் கோபத்தை அடக்கி வைப்பதால் பல பிரச்சனைகள் நமது உடலில் ஏற்படும்.

கோபத்தை கட்டுப்படுத்தினால் நமது உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பே முழுமையான சேதத்தை சந்திக்க நேரிடும்.நமது உடலின் மிகப்பெரிய உள்ளுறுப்பு கல்லீரல்.கோபத்தை அடக்கி வைத்தால் இந்த கல்லீரல் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும்.நாம் நமது கோபத்தை உள்ளடக்கி வைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் கல்லீரல் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.எனவே கோபத்தை அடக்கி வைப்பதை தவிர்த்து விட்டு அதை வெளிப்படுத்திவிடுங்கள்.

கல்லீரல் நமது உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் பணியை செய்கிறது.செரிமானத்திற்கு தேவைப்படும் இரசாயனங்களை இந்த கல்லீரல் உற்பத்தி செய்கிறது.உணவின் மூலம் உடலுக்குள் செல்லும் நச்சுக் கிருமிகளை வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது.

இரத்தத்தில் படியும் கழிவுகளை வடிகட்டும் பணியை கல்லீரல் செய்கிறது.இரத்தத்தில் காணப்படும் சர்க்கரை மற்றும் கொழுப்பை ஒழுங்குபடுத்தும் பணியை செய்கிறது.உடலுக்கு தேவையான வைட்டமின்களை சேகரித்து வைத்து சரியான நேரத்தில் வழங்குகிறது.இப்படி கல்லீரல் என்ற உறுப்பு 500க்கும் அதிகமான வேலையை செய்கின்றது.

நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கு ஏற்ற வடிவில் மாற்றிக் கொடுக்கும் பணியை கல்லீரல் செய்கிறது.கல்லீரல் நோய் ஏற்பட்டால் எடை இழப்பு,குமட்டல்,வாந்தி,வயிற்று வலி,கால் வீக்கம்,பசியின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சரியான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

Exit mobile version