Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிக்கடி பூரி சாப்பிடுறீங்களா? அப்போ இந்த அலார்ட் உங்களுக்கானது!! உடனே செக் பண்ணுங்க!!

நம் அனைவருக்கும் பூரி விருப்ப உணவாக இருக்கிறது.பூரி வேண்டாமென்று சொல்பவர்கள் மிகவும் குறைவு.மைதா,கோதுமை போன்ற மாவில் இருந்து பூரி தயாரிக்கப்படுகிறது.பூரி மிகவும் ருசியான உணவுகள் பட்டியலில் டாப் இடத்தை வகிக்கிறது.

சிலர் பூரி உணவு என்றால் விரும்பி அதிகமாக சாப்பிடுவார்கள்.எத்தனை பூரி சாப்பிட்டோம் என்ற கணக்கு இல்லாமல் பூரியை உள்ளே தள்ளுவார்கள்.கோதுமை,மைதா எந்த மாவில் தயாரித்த பூரியாக இருந்தாலும் அவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும்.

பூரி எண்ணெய் உணவு என்பதால் அதை குறைவான அளவே சாப்பிட வேண்டும்.அதிகமாக உட்கொண்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்துவிடும்.பூரியை அதிகமாக சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

மைதா பூரியை சாப்பிட்டால் மலச்சிக்கல்,செரிமானப் பிரச்சனை போன்றவை அதிகமாக ஏற்படும்.நீங்கள் அடிக்கடி பூரி உணவை சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரம் அதிகரித்து நோய் பாதிப்புகள் அதிகரித்துவிடும்.எண்ணெய் உணவான பூரியை அதிகமாக சாப்பிட்டால் கடுமையான அஜீரணக் கோளாறு ஏற்படும்.

பூரியுடன் உருளைக்கிழங்கு மசாலா வைத்து சாப்பிடுவது பலரது விருப்பமான இருக்கிறது.ஆனால் இவற்றை அதிகமாக சாப்பிட்டால் வயிறு உப்பசம்,இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.இரவு நேரத்தில் பூரி உணவை சாப்பிட்டால் தூக்கமின்மை,மாரடைப்பு போன்ற ஆபத்தான பிரச்சனைகள் வரும்.பூரியில் உள்ள எண்ணெய் வயிற்றில் கெட்ட கொழுப்பை அதிகரித்து தொப்பையை உருவாக்கிவிடும்.

அதேபோல் பலமுறை பயன்படுத்திய எண்ணையில் பூரி செய்து சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.இது உடல் ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கச் செய்துவிடும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பூரி போன்ற எண்ணெய் உணவுகளை அடிக்கடி செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.பூரிக்கு பதில் சப்பாத்தி,கோதுமை தோசை போன்றவை செய்து சாப்பிடலாம்.

Exit mobile version