முள்ளங்கி சாப்பிடுறிங்களா? அப்போ இந்த உணவுகளை மறந்தும் சாப்பிட்டுவிடாதீர்!!

0
171
Do you eat radish? Then don't forget to eat these foods!!

தென்இந்திய மக்கள் விரும்பி உண்ணும் காய்கறிகளில் முள்ளங்கியும் ஒன்று.முள்ளங்கி பருப்பு சாம்பார்,முள்ளங்கி சட்னி,முள்ளங்கி வடை,முள்ளங்கி பொரியல்,முள்ளங்கி ஜூஸ் என்று முள்ளங்கியை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகிறது.முள்ளங்கி நீர்ச்சத்து நிறைந்த காயாகும்.

முள்ளங்கியை உணவாக எடுத்துக் கொண்டால் சளி,இருமல் குணமாகும்.முள்ளங்கி ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.உடல் பலவீனத்தை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க    உதவுகிறது.முள்ளங்கியில் மெக்னீசியம்,கால்சியம்,பொட்டாசியம்,வைட்டமின்கள்,துத்தநாகம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

இப்படி பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் முள்ளங்கியை சில உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

முள்ளங்கியுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடக் கூடாது.இரண்டு காய்கறிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை என்றாலும் இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளும் போது வயிற்று அமிலம் அதிகரித்துவிடும்.முள்ளங்கியுடன் பாகற்காயை உட்கொண்டால் சுவாச பிரச்சனை ஏற்படும்.

முள்ளாகியுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடக் கூடாது.இரண்டு காய்கறிகளும் அதிக நீர்ச்சத்து நிறைந்தவை.இதை ஒன்றாக சாப்பிடும் போது வயிறு வீக்கம்,வயிறு உப்பசம்,வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

முள்ளங்கி உணவு உட்கொண்ட உடனே பால் அருந்தக் கூடாது.நீங்கள் முள்ளங்கி உணவு உட்கொண்ட உடனே பால் அருந்தினால் வயிற்றுவலி,செரிமானக் கோளாறு,வயிறு வீக்கம் உள்ளிட்ட தொந்தரவுகளை சந்திக்க நேரிடும்.