Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடிக்கடி தலைவலியை அனுபவிக்கிறீங்களா? தலைவலி சிட்டாக பறந்துபோக.. இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க!!

இந்த காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வருகின்றோம்.வேலை,பணப் பிரச்சனை,பர்சனல் பிரச்சனை,குடும்ப பிரச்சனை போன்றவற்றை சமாளிக்க முடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.

மனதில் கவலைகள் தோன்றிவிட்டால் நிம்மதியான தூக்கம் என்பது கானல் நீராகிவிடும்.தூக்கம் இல்லையென்றால் தலைவலி,மன அழுத்தம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்.இதனால் கடுமையான தலைவலியை அனுபவிக்கக் கூடும்.

உடல் சார்ந்த பிரச்சனைகள் இருந்தாலும் கடுமையான தலைவலி ஏற்படும்.அதேபோல் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளாலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது.காஃபின்,ஆல்கஹால்,சோடியம் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் தலைவலியை உண்டாக்கும்.

இந்த ஒற்றைத்தலைவலி பாதிப்பில் இருந்து மீள சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.தினமும் காலையில் 20 முதல் 30 நிமிடங்கள் யோகா,தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

சீரான உணவுகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் தலைவலி பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.தினமும் 8 மணி நேர தூக்கத்தை அனுபவிப்பதன் மூலம் தலைவலி பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

கொத்தமல்லி விதை,சுக்கு,துளசி போன்ற மூலிகை பொருட்களை கொண்டு தேநீர் செய்து பருகினால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு குணமாகும்.ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் ஒற்றைத் தலைவலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.

ஒற்றைத் தலைவலியை குணப்படுத்தும் மூலிகை தேநீர்:

தேவைப்படும் பொருட்கள்:-

1)கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன் 2)சுக்கு பீஸ் – ஒன்று 3)நாட்டு சர்க்கரை – ஒரு ஸ்பூன்
4)துளசி – ஒரு ஸ்பூன் 5)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.முதலில் கொத்தமல்லி,சுக்கை வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.பிறகு துளசி இலையை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு பொடித்த கொத்தமல்லி கலவையை போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

3.அடுத்து துளசி இலை மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

4.இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

Exit mobile version