MID UPPER BACK PAIN: உலகில் பெரும்பாலான மக்கள் அனுபவிக்கும் உடல் நல பிரச்சனையாக முதுகு வலி உள்ளது.குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்த நிலையில் வேலை பார்க்கும் நபர்களுக்கு முதுகு வலி பாதிப்பு அதிகம் ஏற்படும்.
மேலும் மருத்துவ பிரச்சனை,காயம்,வயது முதுமை,கால்சியம் குறைபாடு,முதுகு தண்டுவட தேய்மானம் போன்ற காரணங்களால் முதுகு வலி பாதிப்பு ஏற்படுகிறது.சிலருக்கு பின்புற கழுத்து பகுதியில் அதிக வலி இருக்கும்.
சிலருக்கு கீழ் மற்றும் மேல் முதுகு தண்டுவட பகுதியில் வலி உணர்வு ஏற்படும்.ஆனால் சிலருக்கு நடு முதுகு தண்டு பகுதியில் அதிக வலி ஏற்படும்.இந்த நடு முதுகு தண்டு வலி மூச்சை அடைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
நடு முதுகு தண்டுவடத்தில் வலி ஏற்பட காரணங்கள்:
நமது உடலில் உள்ள உணவுக் குழாயில் காற்று அல்லது ஆசிட் தேங்கும் பொழுது உணவுக் குழாய் விரிவடையும்.இதனால் மார்பு பகுதியில் அழுத்தம்,பிடிப்பு போன்றவை ஏற்படும்.இதேபோல் தான் பின்பக்க மேல் நடு முதுகு தண்டுவட பகுதியிலும் வலி,அழுத்தம்,பிடிப்பு போன்றவை ஏற்படும்.
உணவுக் குழாயில் ஆசிட் உருவாக காரணங்கள்:
*புளித்த உணவுகள்
*மதுப்பழக்கம்
*அதிகளவு தேநீர் அருந்துதல்
*ஹோட்டல் உணவுகள்
*உரிய நேரத்தில் உட்கொள்ளாமை
உணவுக் குழாயில் உள்ள ஆசிட்,வாயுக்கள் வெளியேற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.அதிக காரம் மற்றும் புளித்த உணவுகளை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும்.உரிய நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்.பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.உங்களுக்கு எதுக்களிக்கும் பிரச்சனை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய தீர்வு காண்பது நல்லது.