உங்களுக்கு காலையில் எழுந்ததும் அசதி உணர்வு உண்டாகிறது என்றால் சோம்பல் நீங்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானம் செய்து பருகுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)துளசி இலை – அரை கப்
2)மிளகு – ஐந்து
3)தூதுவளை இலை – கால் கப்
4)ஆடாதோடை இலை – இரண்டு
5)மஞ்சள் தூள் – சிட்டிகை எ;அளவு
செய்முறை விளக்கம்:-
படி 01:
துளசி இலை,தூதுவளை இலை மற்றும் ஆடாதோடை இலையை மேலே சொல்லப்பட்டுள்ள அளவு படி எடுத்து பாத்திரம் ஒன்றில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
படி 02:
இதன் பிறகு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டு முதல் மூன்று முறையாவது அலசி சுத்தம் செய்ய வேண்டும்.மூலிகை இலைகளில் படிந்துள்ள தூசி,மண் போன்றவை அகலும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.
படி 03:
பிறகு ஐந்து மிளகை போட்டு லேசாக இடித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
படி 04:
பிறகு இடித்து வைத்துள்ள மிளகுத் தூள் மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிட வேண்டும்.
படி 05:
அதன் பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மூலிகை இலைகளை பொடியாக நறுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து மிதமான தீயில் கஷாயம் காய்ச்ச வேண்டும்.
படி 06:
ஐந்து முதல் எட்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கஷாயம் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாத்திரத்தை இறக்க வேண்டும்.
படி 07:
பிறகு இந்த பானத்தை ஆறவைத்து வடிகட்டி காலை,மதியம்,இரவு என்று மூன்றுவேளையும் பருகினால் சோமல் முற்றிலும் குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)சுக்கு – ஒரு துண்டு
2)சீரகம் – ஒரு தேக்கரண்டி
3)வர கொத்தமல்லி விதை – அரை தேக்கரண்டி
4)துளசி இலை – ஒரு தேக்கரண்டி
5)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
படி 01:
அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வர கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.
படி 02:
பிறகு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் போட்டு வாட்டி எடுக்க வேண்டும்.அதன் பிறகு மிக்சர் ஜாரில் சீரகம்,வர கொத்தமல்லி,வர கொத்தமல்லி விதை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
படி 03:
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு இடித்து வைத்துள்ள சுக்கு கலவையை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
படி 04:
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி அளவு துளசி இலைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வையுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் சேர்த்து பருகினால் உடல் சோர்வு நீங்கும்.