இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பேருந்து, ரயில் டிக்கட்டுகள் புக் செய்து உள்ளார்கள் இதனால்பேருந்து, ரயில் போன்றவற்றில் கூட்டங்கள் நிரம்பி வழியும், தீபாவளி வியாழக்கிழமை வருகிறது.
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பணிநாளக இருக்கிறது, இதனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள்,வேலைக்காக தீபாவளிக்கு அடுத்த நாளே திரும்ப வேண்டய கட்டாயம் ஏற்படுகிறது. அடுத்த நாள் பள்ளி கல்லூரிகள், அரசு அலுவகங்கள் செயல்படும் என்பதால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
தீபாவளி அன்றே பணிகளுக்கு திரும்ப வேண்டிய நிலைமை ஏற்படும்.அடுத்து வரும் நாட்கள் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை நாட்கள் என்பதால் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்தால் தொடர்ந்து வரும் நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். மேலும் வெள்ளிக்கிழமை நவம்பர் 1 விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் பணிபுரிபவர்கள் ஞாயிற்று கிழமை வேலைக்காக நகரங்களுக்கு திரும்புவார்கள், இதனால் போக்குவரத்து மக்கள் கூட்டமின்றி சுலபமாக இருக்கும் . இதனால் நவம்பர் 1 வெள்ளிக்கழமை விடுமுறை அளிப்பது தொடர்பாக ஆலோசணை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இதனால் தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.