Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் புருவ முடிகளை எடுக்கும் பொழுது வலி, வீக்கம் ஏற்படுகின்றதா!!? அதை குணப்படுத்த இதோ சில டிப்ஸ்!!! 

#image_title

கண் புருவ முடிகளை எடுக்கும் பொழுது வலி, வீக்கம் ஏற்படுகின்றதா!!? அதை குணப்படுத்த இதோ சில டிப்ஸ்!!!

பெண்கள் பலரும் தங்கள் கண்களின் மேல் இருக்கும் புருவ முடிகளை அழகாகவும், அடர்த்தியாகவும் வைத்துக் கொள்ள நினைப்பார்கள். இதற்காக அவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு முன் ஒரு முறை என்று திரெட்டிங் செய்வார்கள்.

அதாவது அழகு நிலையம் சென்று நூல் பயன்படுத்தி கண் புருவ முடிகளை அழகாக எடுப்பார்கள். அந்த சமயம் பெண்களுக்கு வலி, வீக்கம் ஏற்படும். முதல் முறையாக திரைப்படம் செய்பவர்களுக்கு வீக்கமும், வலியும் ஏற்படும்.

இந்த திரெட்டிங் செய்வதால் புருவத்தை சீர்படுத்தி ஒரே வளரச் செய்யலாம். கண் புருவ முடி அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் பொழுது அடிக்கடி திரெட்டிங் செய்வது அவசியமாகும். அவ்வாறு திரெட்டிங் செய்யும் பொழுது ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

திரெட்டிங் செய்யும் பொழுது வலி ஏற்படாமல் இருக்க…

* நம் கண்களை சுற்றி எண்ணெயை பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்து கொள்ளை வேண்டும். பின்னர் இதை கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் திரெட்டிங் செய்யலாம்.

* முகத்திற்கு பூசும் பவுடரை கண்களின். மேல் பூசி விட்டு திரெட்டிங் செய்யலாம். எரிச்சல், வலி இல்லாமல் இருக்கும்.

* முகத்தை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் முகத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

* திரெட்டிங் செய்து முடித்த பிறகு வலி, வீக்கம் ஏற்பட்டால் ஐஸ் கட்டி கொண்டு கண் புருவங்களை மசாஜ் செய்யலாம்.

Exit mobile version