குழந்தைகளுக்கு சளி காய்ச்சலுக்கு டானிக் கொடுக்குறீங்களா? அப்போ இதை ஒருமுறை செக் பண்ணுங்க!!

0
117
Do you give children a tonic for colds? So check this once!!

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் குழந்தைகளுக்கு சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது.குழந்தைகளுக்கு என்ன நோய் வருகிறது என்றே தெரியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஊட்டச்சத்து உணவு சாப்பிடவில்லை என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோய் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் பாதிப்பு ஏற்படுவதால் மாத்திரை,மருந்து எப்பொழுதும் வைத்திருக்க வேண்டிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.மாத்திரை,மருந்து கொடுத்தால் தான் குழந்தைகளுக்கு நோய் பாதிப்புகள் குணமாகிறது.அப்படி இருக்கையில் அவர்களுக்கு கொடுக்கும் மாத்திரை மருந்துகளில் சில விஷயங்களை பார்க்க வேண்டியது முக்கியம்.

நீங்கள் மெடிக்கல் ஷாப்பில் மருந்து மாத்திரை வாங்கினால் முதலில் அதன் காலாவதி தேதியை சரிபார்க்க வேண்டும்.ஒருவேளை வீட்டில் மருந்து இருப்பு வைத்திருந்தாலும் அதன் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.

அதற்கு முன்னர் உரிய நோய்க்கான மருந்து,மாத்திரையை தான் குழந்தைகளுக்கு கொடுக்கின்றோம் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.குழந்தைகளில் வயதிற்கு ஏற்ப மருந்து அளவு கொடுக்க வேண்டும்.சிறு குழந்தைகளுக்கு மில்லி அளவு தான் கொடுக்க வேண்டும்.மருத்துவர் ஒரு குழந்தைக்கு பரிந்துரைத்த மருந்தை மற்றொரு குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.