Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!!

சாப்பிட்ட உடனேயே டாய்லெட் செல்கிறீர்களா? இதை குடித்தால் சரியாகிவிடும்!!

சில பேருக்கு சாப்பிட்ட உடனேயே மலம் கழிக்க செல்வார்கள். இதுபோன்று ஏதேனும் ஒரு முறை நடந்தால் அது பிரச்சனை அல்ல ஒவ்வொரு முறையும் இவ்வாறு சாப்பிட்டு விட்டு சென்றாள் பிரச்சனையாகும். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்தும் ரத்தத்தில் கலந்து புதிய ரத்தமாக மாறி உடம்பிற்கு நன்மை கொடுக்க வேண்டும். ஆனால் இது போன்ற பிரச்சனை இருப்பவர்களின் ரத்தத்தில் அவர்களின் உணவு கலக்காது அதனால்யே சாப்பிட்ட உடன் மலம் கழிக்க செல்வார்கள்.

இந்த பிரச்சனையால் சில பேர் மிகவும் ஒல்லியாக காணப்படுவார்கள் அல்லது உடம்பில் இருக்கக்கூடிய கெட்ட கொழுப்பின் காரணமாக சிலர் மிகவும் குண்டாகவும் காணப்படுவார்கள். இதை சரி செய்வதற்கு ஒரு சூப்பரான டிப்ஸ் இங்கு தெரிந்து கொள்வோம்.

செய்முறை:
இதை செய்வதற்கு முதலில் பிரஷ்ஷான தயிரை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தயிரின் கெட்டித்தன்மை போகும்வரை ஸ்பூனில் நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு டம்ளர் அளவு சாதாரண தண்ணீரை சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இதனுடன் கால் தேக்கரண்டி மிளகுப் பொடி மற்றும் கால் தேக்கரண்டி பெருங்காய பொடியை சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதை தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வரவும். இவ்வாறு இதை குடிக்கும் போது சாப்பிட்ட உடன் மலம் போகிற பிரச்சனை இருக்கவே இருக்காது. இதை ஒரு வாரங்களுக்கு தொடர்ந்து குடித்து வர நல்ல ஒரு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். இதை வாழ்நாள் முழுவதும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை நேரம் கிடைக்கும் போது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்தாலே போதுமானது.

இவ்வாறு இதை தொடர்ந்து குடித்து வருவதால் உடம்பில் செரிமானம் நன்கு நடந்து சாப்பிடக்கூடிய உணவுகள் ரத்தத்தில் கலந்து புது ரத்தமாக மாறும். சில பேருக்கு சாப்பிடக்கூடிய உணவுகள் கெட்ட கொழுப்பாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது எனவே இதை குடித்து வர கெட்ட கொழுப்புகள் மாறாமல் நல்ல கொழுப்பாக மாறும். மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் அல்சர் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தீர்வை அளிக்கும்.

 

 

Exit mobile version