குழந்தைகள் தூங்கும் போது பல் கடிக்கிறீங்களா!! இல்ல பல் அரைக்கிறீங்களா!!இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!

0
177
#image_title

குழந்தைகள் தூங்கும் போது பல் கடிக்கிறீங்களா!! இல்ல பல் அரைக்கிறீங்களா!!இதனை கட்டாயம் செய்ய வேண்டும்!!

சில குழந்தைகள் உறக்கத்தில் பற்களை கடிப்பார்கள் பெற்றோர்கள் குழந்தை அயர்ந்து உறங்குவதல் இவ்வாறு செய்கிறார்கள் என்று நினைத்து சாதாரணமாக விட கூடாது. குழந்தைகள் மன அழுத்தம் அல்லது தவிப்பு போன்ற உணர்வுகளை எதிர் கொள்வதால் தான் உறக்கத்தில் இவ்வாறு பற்களை கடிக்கும் பழக்கம் உருவாகும். இதை சரி செய்ய பெற்றோருக்கும் குழந்தைக்கும் ஆனா இனக்கத்தை அதிக படுத்த வேண்டும், இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குழந்தைக்கு குடிக்க நீர் கொடுங்கள், இரவில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்து தசைகளை தளர்வு செய்து உறங்க வையுங்கள். தாயின் அரவணைப்பு இதை சரி செய்து விடும்.

மன அழுத்தத்துக்கான வடிகால் இல்லாமல் போகும்போதுதான் இந்த பிரச்சினை ஏற்படுகிறது என்கிறார்கள், மருத்துவர்கள்.வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என்று பல்வேறான மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொண்டால், அவை தூக்கத்தின் போது இப்படி வெளிப்படும் என்கிறார்கள், உளவியலாளர்கள்.

பற்கள் தொடர்ந்து இப்படி நறநறவென்று அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். எந்தவொரு இனிப்பான உணவையும், சூடான அல்லது குளிர்ச்சியான பானங்களையும் சாப்பிட முடியாது. வெகுநாட்கள் இந்த பிரச்சினை தொடர்ந்தால் தாடையின் சதைகள் இறுகி முகத்தின் அமைப்பே குலைந்து போய்விடும். தாடை எலும்பை மண்டை ஓட்டோடு இணைத்திருக்கும் மூட்டு பகுதியும் பாதிக்கப்பட்டு வலி உண்டாக்கும்.

தேவையான பொருட்கள்:

1. மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

2. பால் – 1 கப்

3. தேன் – தேவையெனில்

செய்முறை:

பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் மஞ்சள் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும். தினமும் தூங்குவதற்கு முன்பு இதை குடிக்க வேண்டும்.

மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர்பெற்றவை. பாலில் ட்ரிப்டோபன் என்னும் மயக்க அமினோ அமிலம் உள்ளது. பால் மஞ்சளுடன் இணைந்தால் தாடை தசைகளை தளர்த்தவும், பற்கள் அரைக்கும் வலியை போக்கவும் உதவும்.