Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!! 

#image_title

உங்கள் வீட்டில் செம்பு பாத்திரம் இருக்கா!!! இதில் தண்ணீர் வைத்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா!!!

நாம் செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதத்தி தண்ணீர் குடிப்பதால் மற்ற உணவுகளை உண்பதால் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

செம்பு என்ற உலோகத்தை தாமிரம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்தால் தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களையும் இதர கிருமிகளையும் நான்கு மணி நேரத்தில் அழித்து விடும். மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடிப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. அதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்…

* செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைக்கப்படும் தண்ணீரில் உள்ள கிருமிகள் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதால் நம் உடலுக்குள் கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் செல்வது தடுக்கப்படுகிறது.

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் செம்பு சத்து குறைந்து ஏற்படும் இரத்த சோகை நோய் குறைகின்றது. மேலும் இரத்த சோகை நோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

* செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்து வந்தால் இருமல் ஏற்படாது.

* செம்பு பானையில் உள்ள தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள உடல்நல பிரச்சனைகள் அனைத்தும் சமநிலையில் வைத்திடும்.

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதால் இரைப்பு நோய் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடித்து வந்தால் பொதுவாக தைராய்டு பிரச்சனைகள் குறைகின்றது.

* செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடித்து வந்தால் மூட்டு வலியை குணப்படுத்தி விடுகின்றது.

* செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்து வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கின்றது.

* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தை பயன்படுத்தி தண்ணீர் குடித்து வந்தால் நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாப்போடு இருக்கலாம்.

* இந்த செம்பில் ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகமாக இருக்கின்றது

இதனால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றது.

 

Exit mobile version