உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? தமிழக அரசிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கிடைப்பது உறுதி!!

0
179
Do you have a daughter? Guaranteed to get Rs.50 thousand from Tamil Nadu Government!!

உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? தமிழக அரசிடம் இருந்து ரூ.50 ஆயிரம் கிடைப்பது உறுதி!!

தமிழக அரசின் சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையால் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.இது ஏழை பெண் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டமாகும்.

ஏழை பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை வளர்க்க மிகவும் சிரமப்படுகின்றனர்.அவர்களின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்து செலவுகளையும் பெற்றோர்கள் சுமக்கும் நிலை உள்ளது.இதனால் சில பெற்றோர்கள் பெண் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் 18 வயது பூர்த்தி ஆவதற்கு முன்னரே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களின் லட்சிய கனவுகளை அழித்து விடுகின்றனர்.

குழந்தை திருமணத்தை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.உங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.50,000 வழங்கப்படும்.உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மட்டும் இருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25,000 வழங்கப்படும்.ஒருவேளை உங்களுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று பெண் பிள்ளைகள் பிறந்திருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ,25,000 வரை வழங்கப்படும்.

இந்த தொகை குழந்தைகளின் பெயரில் அவர்களது வங்கி கணக்கில் முதலீடு செய்யப்படும்.பெண் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்ததும் முதிர்வு தொகையை மாவட்ட சமூக நலத்துறை மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நிலையில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து 18 வயது நிரம்பியவர்கள் தங்கள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

1)வைப்புநிதி பத்திரம்

2)10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

3)பயனாளியின் வங்கி பாஸ் புக்

4)பயனாளியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

விண்ணப்பிக்க வேண்டிய முகாரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,மாவட்ட ஆட்சியரகம்,சிங்காரவேலனார் மாளிகை,8 வது தளம், இராஜாஜி சாலை,சென்னை – 01.