அடிக்கடி சளி இருமல் வருகிறதா? இதற்கு நாட்டு வைத்தியம் இருக்க கவலை எதுக்கு?

0
120
Do you have a frequent cold cough? Why bother to have a country remedy for this?

பருவநிலை மாற்றம்,காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் நுரையீரல் பாதிப்பு,சளி,இருமல்,காய்ச்சல் போன்ற வியாதிகள் நம்மை அதிகம் பாதிக்கிறது.இந்த சளி இருமலை எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை கொண்டு குணப்படுத்திவிடலாம்.

தீர்வு 01:

1.பட்டை – ஒரு துண்டு
2.தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு துண்டு பட்டையை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடித்து தேன் கலந்து சாப்பிட்டால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 02:

1.துளசி – 10 இலைகள்
2.இஞ்சி – ஒரு துண்டு
3.தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு பத்து துளசி இலைகளை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இவை இரண்டையும் மிக்ஸ் செய்து தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கு ஒழுகுதல்,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 03:

1.வெற்றிலை – ஒன்று
2.கருப்பு மிளகு – பத்து
3.இஞ்சி – ஒரு துண்டு

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 10 கருப்பு மிளகு,ஒரு வெற்றிலை மற்றும் ஒரு துண்டு இஞ்சியை இடித்து போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி,இருமல் போன்ற பாதிப்புகள் குணமாகும்.

தீர்வு 04:

1.படிகாரம் – சிறிதளவு
2.தேன் – ஒரு தேக்கரண்டி

அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடாக்கவும்.பிறகு அதில் சிறிதளவு படிகாரம் சேர்த்து உருகும் வரை சூடாக்கவும்.பிறகு அதை பொடித்து தேன் கலந்து சாப்பிட்டால் சளி,இருமல்,காய்ச்சல்,சைனஸ் போன்ற பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.