Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூக்கத்தை காதலிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.அதும் ஒரு சிலருக்கு தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அப்பொழுது தான் அவர்களுக்கு உறக்கமே வருமென்று கூறுவார்கள்.அது மிகவும் தவறான விஷயம். மறந்து போய் கூட அப்படி பண்ணி விடாதீர்கள். அதற்கான காரணம் என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்.

பொதுவாக உடலுக்கு குளுமை கொடுத்தால்தான் உறக்கம் வருமாம். அதுவும் கால்களின் பாதங்களில் எந்த ரோமமும் இல்லாததால் கால்களின் பாதம் மிகவும் மென்மையாக இருக்கும். பாதங்களின் வழியே குளிர்ச்சியானது உடலுக்குச் சென்று தூக்கத்தை வரவழைக்குமாம்.
எனவே நீங்கள் தூங்கும் பொழுது கால்களை வெளியே வைத்து தூங்குங்கள். உடனடியாக தூக்கம் வரும். நம் பாதங்களில் வாஸ்குலர் என்ற கட்டமைப்பு உள்ளதால் உடலில் உள்ள சூட்டை அதிவிரைவில் குறைகிறது.

பொதுவாக நமக்கு காய்ச்சல் ஏற்படும் காலங்களில் நாம் தூக்கமின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்போம் ஏனெனில் காய்ச்சல் காலங்களில் உடல் சூடு அதிகமாக இருக்கும் அதனால் நமக்கு தூக்கம் வராது.

இந்த பிரச்சனையை குறித்த நியூயார்க் பல்கலைகழகம் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது. அது யாதெனில், தூங்கும்பொழுது கால்களை வெளியே வைப்பதனால் உடனடியாக தூக்கம் வரும். அதே போல் இரவில் குளித்து விட்டு தூங்கினாலும் உடல் குளுமை பெற்று நல்ல தூக்கம் வருமாம்.

தூக்கமின்மை என்பது இந்த காலகட்டத்தில் மிகப் பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. தூக்கமின்மை காரணமாக மன அழுத்தம் அதிகமாக ஏற்படும்.எனவே தூக்கமின்மை என்பது ஒரு பெரிய கொடிய நோய். அதை தீர்க்கும் மருந்து நம்மிடமே உள்ளது.எனவே இந்த ஒரு சிறிய எளிய முறையை பயன்படுத்தி தூக்கமின்மையில் இருந்து விடுபடுங்கள்.

Exit mobile version