ஒரு கைப்படி அளவு வெங்காயத் தோல் இருக்கா..? இவ்வாறு செய்தால் நிமிடத்தில் வெள்ளை முடி அனைத்தும் கருமையாகிவிடும்..!!
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் நரை முடி பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தினால் இந்த நரை முடியை கருமையாக்கிவிடலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
*கருஞ்சீரகம் – 2 தேக்கரண்டி
*வெந்தயம் – 2 தேக்கரண்டி
*வெங்காய தோல் – 1 கைப்பிடி அளவு
*கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
*தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
*வைட்டமின் E கேப்சூல் – 1
செய்முறை…
அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி கருஞ்சீரகம், 2 தேக்கரண்டி வெந்தயம், 1 கைப்பிடி அளவு வெங்காயத் தோல் மற்றும் 1 கைப்படி அளவு கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை நன்கு ஆறவிட்டு பொடித்து கொள்ளவும். இதை ஆறவிட்டு ஒரு டப்பாவில் சேமித்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள பொடியில் 2 தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1 வைட்டமின் E கேப்சூல் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
இதை தலை முடிகளின் வேர்காள் பகுதிகளில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் தலைக்கு குளிக்கவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை என தொடர்ந்து செய்து வந்தால் நரை முடி அனைத்தும் கருமையாகி விடும்.