தலையில் பொடுகு,பேன் இருந்தால் அரிப்பு ஏற்படும்.அது மட்டுமின்றி அழுக்குகள் அதிகளவு சேரும்.இதனால் தலைமுடியில் இருந்து ஒருவித வாடை வீசும்.சிலருக்கு எத்தனை முறை தலைக்கு குளித்தாலும் தலையில் இருந்து சிக்கு வாடை மட்டும் நீங்காது.இந்த சிக்கு வாடை பிரச்சனை இருப்பவர்கள் ஆரஞ்சு பழத் தோலை வைத்து தீர்வு காணலாம்.
1)ஆரஞ்சு பழத் தோல்
2)தயிர்
ஒரு ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கழுவிக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு 1/4 கப் தயிர் சேர்த்து அரைக்கவும்.
இந்த ஹேர் பேக்கை தலைமுழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.பிறகு குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசினால் தலையில் சிக்கு வாடை வீசுவது கட்டுப்படும்.
1)ஆரஞ்சு பழத் தோல்
2)எலுமிச்சை சாறு
சிறிதளவு ஆரஞ்சு தோல் எடுத்து ஒரு கப் த்ண்ணீர்ல் போட்டு கொதிக்க வைக்கவும்.பிறகு இதை ஆறவிட்டு வேறொரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ளவும்.
இந்த ஆரஞ்சு தோல் நீரில் ஒரு எலுமிச்சை பழ சாறு மிக்ஸ் செய்து தலைக்கு அப்ளை செய்து குளித்தால் இயற்கையான வாசனை கிடைக்கும்.
1)ஆரஞ்சு தோல்
2)தேங்காய் எண்ணெய்
அடுப்பில் ஒரு வாணலி வைத்து கால் லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் சிறிதளவு உலர்ந்த ஆரஞ்சு தோல் சேர்த்து கொதிக்க வைக்கவும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.இந்த எண்ணெயை தினமும் தலைக்கு அப்ளை செய்து வந்தால் தலைமுடி வாசனையாக இருக்கும்.
1)ஆரஞ்சு தோல்
2)கற்றாழை ஜெல்
ஆரஞ்சு தோலை நன்றாக உலர்த்தி மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.பிறகு பிரஸ் கற்றாழை ஜெல்லை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து ஆரஞ்சு பவுடரில் கலந்து தலை முழுவதும் அப்ளை செய்யவும்.
ஒரு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசி எடுக்கவும்.இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் தலைமுடி வாசனை அதிகமாகும்.