கண் வலி அதிகமா உள்ளதா? அப்போ இந்த ஆயுர்வேத மருத்துவத்தை ட்ரை பண்ணுங்க! 100% தீர்வு கிடைக்கும்!!

0
67
Do you have a lot of eye pain? Then try this Ayurvedic medicine! 100% solution available!!

நீண்ட நேரம் மொபைல்,லேப்டாப் போன்ற பொருட்களை பயன்படுத்தினால் கண் வலி,கண் பார்வை குறைபாடு,கண் அரிப்பு,கண் சிவந்து போதல்,கண் கட்டி உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.இதில் கண் வலியால் பலரும் அவதியடைந்து வருகின்றனர்.இந்த கண் வலியை ஆயுர்வேத முறையில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

1)கருவேலங் காய்
2)பசும் பால்

கிராமப்புறங்களில் செழிப்பாக வளர்ந்து நிற்கும் கருவேல மரத்தில் இருந்து பிஞ்சு காய் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் 50 மில்லி காய்ச்சாத பசும் பால் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இதை பாதங்களுக்கு அடியில் வைத்து காட்டன் துணியில் கட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்.இப்படி செய்தால் கண் வலி நீங்கும்.கால் பாத நரம்புகளுக்கும் கண்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.கால் பாதங்களில் இந்த பேஸ்டை வைப்பதால் கண் வலி குணமாகும்.

1)கல் உப்பு
2)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு அதில் சிறிது கல் உப்பு சேர்த்து சூடாக்கி கொள்ளுங்கள்.பிறகு இந்த நீரில் காட்டன் பஞ்சை நினைத்து கண்களை சுற்றி அழுத்தம் கொடுத்தால் கண் வலி குணமாகும்.

1)படிகாரம்
2)மஞ்சள் தூள்

10 கிராம் படிகாரம் மற்றும் 10 கிராம் மர மஞ்சள் தூளை மிக்ஸ் செய்து சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.மறுநாள் இந்த பரிகார நீரை கொண்டு கண்களை சுத்தம் செய்தால் கண் வலி முழுமையாக குணமாகும்.

1)புளியம் பூ
2)தண்ணீர்

ஒரு கைப்பிடி புளியம் பூவை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு நீர் விட்டு அரைத்து கண்களை சுற்றி பற்று போட்டால் கண் வலி குணமாகும்.

1)இஞ்சி
2)வெல்லம்
3)மிளகு

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு நான்கு மிளகை உரலில் போட்டு இடித்து இஞ்சி சாறில் கலந்து கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு துண்டு வெல்லம் கலந்து பருகினால் கண் வலி முழுமையாக குணமாகும்.