சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!!
காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிக்கவும்.
தேவையான பொருட்கள்:-
1)மஞ்சள்
2)இஞ்சி
3)பூண்டு
4)மிளகு
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனிடையே உரலில் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி, ஒரு பல் தோல் நீக்கிய பூண்டு மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை போட்டு இடிக்கவும்.
இதை சூடாகி கொண்டிருக்கும் தண்ணீரில் போட்டு 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் காய்ச்சவும். 1 டம்ளர் தண்ணீர் 1/2 டம்ளராக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு இதை ஒரு பவுலுக்கு மாற்றி அருந்தவும். இந்த கசாயம் நாள்பட்ட சளி, இருமல், தலைவலியை முழுமையாக குணப்படுத்த உதவுகிறது.
*மஞ்சள்
குர்குமின் என்ற வேதிப்பொருள் மஞ்சளில் உள்ளது. இது உடலில் உள்ள தொற்று கிருமிகளை அழிக்க உதவுகிறது.
*இஞ்சி, பூண்டு, மிளகு
இந்த 3 பொருட்களும் உடலுக்கு தேவையான ஆக்சிஜனேற்ற பண்புகளை வழங்குகிறது.