உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!      

0
1046

உங்களுக்கு மனக்குழப்பங்கள் அதிகம் உள்ளதா? உடனே சிவப்பு சந்தன மாலையை அணியுங்கள்!!

 

சிவப்பு சந்தனம் ஆயுர்வேத மருத்துவ முறையின் ஒரு புகழ்பெற்ற தாவரம் ஆகும். வீக்கம், காயங்கள், தோல் பிரச்சனைகள் போன்ற பல நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இது பாரம்பரியமாக பயன்படுகிறது.

சிவப்பு சந்தன மரம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் வளர்கிறது. இதன் அழகு மற்றும் மருத்துவ குணங்களால் உலகெங்கும் சிவப்பு சந்தனத்தின் தேவை அதிகமாக உள்ளது.

இந்த சந்தனமானது திலகமிடுவதற்கு மட்டுமின்றி மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது. நாமும் சந்தன மாலைகளை அணிந்து கொள்ளலாம். சந்தன மாலைகள் பல மாதங்களுக்கு மனம் மயக்கும் மணம் பரப்பக்கூடியவை.

சிவப்பு சந்தன மாலை அணிந்து கொண்டு காயத்ரி மந்திரங்களை உச்சரிப்பதால் உங்களின் விருப்பமும் விரைவில் நிறைவேறும்.

மாணவர்கள் சிவப்பு சந்தன மாலை அணிந்து கொண்டால் அறிவும், ஞானமும் பெறலாம்.

தேர்வு மற்றும் அரசுப் பணிகளுக்கான பயிற்சி செய்பவர்கள் சிவப்பு சந்தன மாலையை அணிந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சியம்.சிவப்பு சந்தன மாலை அணிந்து கொள்வதால் மன அமைதி கிடைக்கும்.

மனகுழப்பமான சூழலில் இருக்கும்போது சிவப்பு சந்தன மாலையை அணிந்து வழிபட்டால் தெளிவு கிடைக்கும்.சிவப்பு சந்தன மாலை அணிவதால் உடல் சூடு குறைந்து முகம் பொலிவு பெறும்.சுப நாட்களில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் 04.30-6.00 மணிக்குள் அணிந்து கொள்ளலாம்.

சிவப்பு சந்தன மாலை அணிய காலையில் குளித்துவிட்டு வழிபாட்டுத்தலத்தில் அமர வேண்டும். அதன்பிறகு சிவப்பு சந்தன மாலையை மனமுருகி வேண்டி அணிந்து கொள்ளலாம். இம்மாலையை அணிவதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.இன்றே அணியுங்கள் சிவப்பு சந்தன மாலை உங்களின் கஷ்டங்களை போக்கிடுங்கள்.