நீங்கள் அடிக்கடி உங்கள் நெஞ்சு பகுதியில் கூர்மையான வலி ஏற்படுவதை உணர்ந்தால் அலட்சியம் கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றவும்.
1)துளசி விதை
2)இலவங்கப் பொடி
3)பன்னீர்
4)சர்க்கரை
கிண்ணம் ஒன்றில் 20 கிராம் துளசி விதை,1/2 தேக்கரண்டி இலவங்கப் பொடி,ஒரு தேக்கரண்டி பன்னீர் மற்றும் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குணமாகும்.
1)இஞ்சி துண்டு
2)எலுமிச்சை சாறு
3)தேன்
ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இடது மார்பு வலி நீங்கும்.
1)தேங்காய் எண்ணெய்
2)கற்பூரம்
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் ஒரு கற்பூரத்தை தூளாக்கி சேர்த்து சிறிது சூடுபடுத்தவும்.இந்த எண்ணெய் இளஞ்சூடானதும் மார்பு பகுதியில் தடவினால் வலி குறையும்.
1)அருகம்புல்
2)தண்ணீர்
ஒரு கிண்ணத்தில் சிறிதளவு அருகம்புல்லை போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்தால் இதய வலி பிரச்சனை சரியாகும்.
1)துளசி இலை
2)தேன்
கிண்ணம் ஒன்றில் துளசி இலை சிறிதளவு போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.
1)மாதுளை சாறு
2)தேன்
ஒரு கப் மாதுளை விதையை ஜூஸாக அரைத்து தேன் கலந்து குடித்து வந்தால் மார்பு பகுதியில் குத்தல் உணர்வு சரியாகும்.