உங்களுக்கு தீராத பல் வலி இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த மூன்று பொருட்கள் போதும்! 

0
237
Do you have a persistent toothache? These three ingredients will cure it!
உங்களுக்கு தீராத பல் வலி இருக்கின்றதா? அதை குணப்படுத்த இந்த மூன்று பொருட்கள் போதும்!
பல் வலி என்பது நம்மமுடைய பற்களில் செத்தை பல் இருந்தாலோ அல்லது பற்களில் கால்சியம் சத்து குறைவாக இருந்தாலோ அல்லது நாம் அடிக்கடி பற்பசைகளை மாற்றி மாற்றி பல் துலக்கினாலோ ஏற்படும்.
மேலும் ஒரு சிலருக்கு தலையில் நீர் கோர்த்து இருந்தாலும் பல் வலி ஏற்படும். பெரும்பாலும் பல் வலி ஏற்படுவது சொத்தை பல் காரணமாகத் தான். இந்த பல் வலி வந்துவிட்டால் பெரும்பாலும் யாரும் இயற்கையான வைத்திய முறைகளை பின்பற்றுவது இல்லை. செயற்கையான மருந்துகளை வாங்கி சாப்பிட பழகிவிட்டனர்
ஒரு சிலர். இயற்கையான மருத்துவமுறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் வலி அதிகரித்துக் கொண்டே இருந்தால் அவர்களும் மாத்திரைகளை சாப்பிட்டு விடுவார்கள். இந்த பதிவில் இயற்கையான முறையில் வெறும் மூன்று. பொருட்களை வைத்து பல் வலியை குணப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* புங்கம் பட்டை
* நல்லெண்ணெய்
* கடுக்காய்த்தாள்
செய்முறை:
பங்கம் பட்டையை இடித்து தூள் செய்து கொள்ள வேண்டும். பின்னர் கடுக்காய் தூள் சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பை பற்ற. வைத்து அதில் சிறிய அளவிலான பாத்திரம் வைத்து பின்னர் அதில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நல்லெண்ணெய் காய்ந்த பின்னர் அதில் இந்த பங்கம் பட்டை தூள், கடுக்காய்தூள் இரண்டையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை பல் வலி ஏற்படும் பொழுது பற்களின் மீது தேய்த்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும்.