உங்கள் வீட்டில் எலிகளின் தொந்தரவு இருக்கா? அப்போ நியூஸ் பேப்பரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! நிச்சயம் தீர்வு கிடைக்கும்!!
நம்மில் பலர் வீடுகளில் எலி தொந்தரவு அதிகம் இருக்கும். இவை நம் வீட்டில் ஒரு முறை புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.
எலி தொல்லை அடியோடு ஒழிய எளிய தீர்வு இதோ..
தேவையான பொருட்கள்:-
*வர மிளகாய்
*மைதா மாவு அல்லது மக்காச் சோள மாவு
*வாஷிங் லிக்விட் அல்லது ஷாம்பு
*வினிகர்
*நியூஸ் பேப்பர்
செய்முறை:-
முதலில் ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்து கொள்ளவும். பின்னர் அதில்
அதில் வினிகர் மற்றும் ஷாம்பு 1 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும். ஷாம்புவிற்கு பதில் வாஷிங் லிக்விட் கூட உபயோகிக்கலாம்.
அடுத்து காரமான வர மிளகாய் 4 எடுத்து கொரகொரப்பாக அரைத்து அந்த கலவையில் சேர்த்து கலந்து விடவும். பிறகு ஒரு நியூஸ் பேப்பர் எடுத்து அவற்றை கட் செய்து தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை முழுவதுமாக தடவி கொள்ளவும்.
இதை வீட்டில் எலி தொந்தரவு இருக்கும் இடத்தில் வைக்கவும். இந்த பேஸ்ட்டை எலிகள் உண்ணும் பொழுது அதன் வாசனையால் எலிகள் வீட்டை விட்டு ஓடிவிடும். இதனால் வீடுகளில் எலிகள் தொல்லை இல்லாமல் அவை அடியோடு ஒழிந்து விடும்.