Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொளுத்தும் வெயிலிலும் மூக்கு சளி ஒழுகுதா? சளியை ஸ்டாப் செய்யும் யூஸ்புல் டிப்ஸ்!!

மழை மற்றும் பனி காலத்தில் சளி பிடிப்பது இயல்பான விஷயம்தான்.ஆனால் கோடை காலத்தில் சளி பிடிக்கிறது என்றால் காலநிலை மாற்றம்தான் காரணம்.கோடை காலத்தில் தொண்டை கரகரப்பு,சளி ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் சிலருக்கு ஏற்படுகிறது.இதற்கு காரணம் தட்பவெப்பநிலை தான் காரணம்.

கோடை வெயிலை தணிக்க சிலர் ஐஸ்க்ரீம்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்கின்றனர்.இதனாலும் சளி,தொண்டைகரகரப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த கோடை கால சளி பாதிப்பை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.

சளி அறிகுறிகள்:

1)இருமல்
2)தலைவலி
3)தொண்டை வலி
4)தொண்டை கரகரப்பு
5)உடல் சோர்வு
6)மூக்கடைப்பு

சளி உருவாக காரணங்கள்:

1)பருவநிலை மாற்றம்
2)பாக்டீரியா தொற்று
3ஐஸ்கீரிம்,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக சாப்பிடுதல்

கோடை கால சளியை குணப்படுத்தும் வழிமுறைகள்:

**உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.ஆரோக்கியமான உணவுமுறை பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

**நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

**குடிப்பதற்கும்,குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.ஐஸ்க்ரீம,ஐஸ் வாட்டர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

**சளி,இருமல் தொற்று இருப்பவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.வெளியில் சென்று வந்தால் கை,கால் மற்றும் முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.இதுபோன்ற ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்றினால் கோடை கால நோய் தொற்றில் இருந்து தப்பித்துவிடலாம்.

Exit mobile version