Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! நல்ல தீர்வு கிடைக்கும்! அனுபவ உண்மை!

#image_title

வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க! நல்ல தீர்வு கிடைக்கும்! அனுபவ உண்மை!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் கரப்பான் பூச்சி நடமாட்டம் அதிகம் இருக்கும்.முக்கியமாக சமையல் செய்யும் இடங்களில் தான் இவை குடி கொண்டிருக்கும்.இதனால் உடலுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் உண்டாகும் சூழல் ஏற்படுகிறது.கரப்பான் பூச்சி பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே சரி செய்வது முக்கியமான ஒன்று.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரம் – 10

*ஊதுபத்தி ஸ்டிக் – 3

செய்முறை:-

1.ஒரு பவுல் எடுத்து அதில் கடவுள் வழிபாடு செய்ய உபயோகிக்கும் 10 கற்பூரத்தை போட்டு தூள் செய்து கொள்ளவும்.

2.பிறகு கடவுள் வழிபாட்டிற்கு பயன்படுத்தும் மற்றொரு பொருளான ஊதுபத்தியில் 3 ஸ்டிக் எடுத்து குச்சிகளை நீக்கிவிட்டுஅதன் துகள்களை சேர்த்து கொள்ளவும்.

3.அதன் பின்னர் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைக்க வேண்டும்.

4.அடுத்து ஒரு ஸ்பிரேயர் எடுத்து அதில் கற்பூரம் மற்றும் ஊதுபத்தி துகள் கலந்த தண்ணீரை ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளித்தால் போதும் அவை வீட்டை விட்டு தெறித்து ஓடிவிடும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு – 1

*ஷாம்பு – 1 தேக்கரண்டி

*சர்க்கரை – 1 தேக்கரண்டி
(அல்லது)
தேன்

செய்முறை:-

1.முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 முழு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து கொள்ள வேண்டும்.

2.பிறகு அதில் 1 தேக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

3.நம் தலைக்கு பயனப்டுத்தும் ஷாம்புகளில் ஏதேனும் ஒரு வகையில் இருந்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து அந்த பவுலில் சேர்க்கவும்.

4.அதன் பிறகு ஒரு ஸ்பூன் சர்க்கரை எடுத்து அதில் சேர்த்து மெதுவாக கலக்கி கொள்ளவும்.

5.கலக்கி வைத்துள்ள கலவையை ஒரு ஸ்பிரேயர் பாட்டிலில் சேர்த்து வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும் இடங்களில் தெளித்தால் அவை மீண்டும் வீட்டு பக்கமே வராது.

Exit mobile version