Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!!

#image_title

உங்கள் வீட்டில் ஒரே கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா? அப்போ இதை செய்து தீர்வு காணுங்கள்!!

வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருந்தால் நம் உடல் ஆரோக்கியம் விரைவில் கெட்டு விடும். காரணம் இவை சமையலறையில் உள்ள உணவுப் பொருட்களை உண்கின்றன. இதே உணவை நாம் சாப்பிடும் பொழுது உடலில் நுண்கிருமிகள் சென்று பல வித நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். வீட்டில் நடமாடும் கரப்பான் பூச்சி தொல்லைக்கு ஆரம்ப நிலையிலேயே முடிவுக்கு கட்டுவது நல்லது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*வாஷிங் சோப் – சிறிதளவு

*தண்ணீர் – 1/2 .லிட்டர்

*ஸ்ப்ரே பாட்டில் – 1

செய்முறை:-

ஒரு பவுலில் சிறிதளவு வாஷிங் சோப் எடுத்து கொள்ளவும். அடுத்து 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடவும்.

சோப்பு தண்ணீர் இருக்கும் இடங்களில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்காது. எனவே இதை ஸ்ப்ரே செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*அம்மோனியா – 2 கப்

*தண்ணீர் – 1 வாலி

செய்முறை:-

1 வாலி தண்ணீரில் அம்மோனியாவை கலந்து பாது பாத்ரூம், கிட்சன் சிங்க் என்று கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளிப்பதன் மூலம் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*பூண்டு பற்கள் – தேவையான அளவு

செய்முறை:-

தேவையான அளவு பூண்டு எடுத்து அதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இந்த பூண்டு துண்டுகளை வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் பரப்பி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

Exit mobile version