உங்களுக்கு சுளுக்கு பிடிச்சுக்குச்சா? இதை சட்டுனு சரி செய்யும் இயற்கை வழிகள் இதோ!

0
118
Do you have a sprain? Here are natural ways to fix it fast!

உங்களுக்கு சுளுக்கு பிடிச்சுக்குச்சா? இதை சட்டுனு சரி செய்யும் இயற்கை வழிகள் இதோ!

நம் கை,கால்,கழுத்து உள்ளிட்ட பகுதிகளை தேவையில்லாமல் அசைத்து விட்டாலோ உடல் ஏற்றுக் கொள்ளாத வேலைகளை செய்தாலோ சுளுக்கு ஏற்பட்டு விடும்.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் குணமாக சில நாட்கள் எடுத்துக் கொள்ளும்.சிலர் சுளுக்கு குணமாக மருந்து,மாத்திரை உட்கொள்வார்கள்.ஆனால் இவை எதுவும் இன்றி இயற்கை வழியில் சுளுக்கை குணமாக்கி கொள்வது நல்லது.

தீர்வு 01:-

1)பூண்டு
2)உப்பு

2 அல்லது 3 பல் பூண்டை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும்.பிறகு சிறிது உப்பு சேர்த்து கலந்து விடவும்.இந்த பேஸ்ட்டை சுளுக்கு பிடித்த இடத்தில் தடவினால் சிறிது நேரத்தில் சுளுக்கு சரியாகி விடும்.

தீர்வு 02:-

1)ஜாதிக்காய்
2)பால்

ஜாதிக்காயை உடைத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் சிறிது பால் சேர்த்து மைய்ய அரைக்கவும்.

இந்த பேஸ்ட்டை வெந்நீரில் கலந்து சுளுக்கு பிடிச்ச இடத்தில் பூசினால் சில நிமிடங்களில் அவை சரியாகி விடும்.

தீர்வு 03:-

1)கற்றாழை ஜெல்

ஒரு துண்டு கற்றாழை எடுத்து அதனுள் இருக்கும் ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு கலக்கவும்.

இந்த கற்றாழை பேஸ்ட்டை சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் அப்ளை செய்தால் விரைவில் தீர்வு கிடைத்து விடும்.

தீர்வு 04:-

1)ஆலிவ் எண்ணெய்
2)வெங்காயம்

ஒரு சின்ன வெங்காயத்தை இடித்து இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணையில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்கி கொள்ளவும்.இவை வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசி விட்டால் சில நிமிடங்களில் அவை சரியாகி விடும்.

தீர்வு 05:-

1)கற்றாழை ஜெல்
2)விளக்கெண்ணெய்

ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெயில் போட்டு ஒரு நிமிடம் சூடாக்கி கொள்ளவும்.இவை வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் பூசி விட்டால் சில நிமிடங்களில் அவை சரியாகி விடும்.