மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட சிரமப்படுகிறீர்களா? இப்படி ஆவி பிடித்தால் நிம்மதியாக சுவாசிக்கலாம்!!

0
166
Do you have a stuffy nose and difficulty breathing? If you catch the spirit like this, you can breathe easily!!

மூக்கில் அடைப்பு ஏற்பட்டு மூச்சு விட சிரமப்படுகிறீர்களா? இப்படி ஆவி பிடித்தால் நிம்மதியாக சுவாசிக்கலாம்!!

நாம் அடிக்கடி சந்தித்து வரும் நோய் பாதிப்புகளில் ஒன்று சளி,இருமல்.இந்த பாதிப்பு ஏற்பட்டால் தலைவலி,மூச்சு விடுதலில் சிரமம்,தலைபாரம்,கடுமையான காய்ச்சல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அதிலும் மூக்கடைப்பு பிரச்சனையால் மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படும்.எனவே மூக்கடைப்பு நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்து பலன் பெறவும்.

தேவையான பொருட்கள்:-

1)கல் உப்பு
2)மஞ்சள் தூள்
3)கற்பூரம்
4)பூண்டு
5)துளசி

செய்முறை:-

ஒரு பெரிய பாத்திரத்தில் 3/4 பாகம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.ஐந்து நிமிடங்களுக்கு சூடாக்கிய பின்னர் 20 கிராம் துளசி,இரண்டு பல் பூண்டு,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்.ஒரு கட்டி கற்பூரம் மற்றும் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து நன்கு இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இந்த நீரை ஆவி பிடித்தால் மூக்கடைப்பு பிரச்சனை சரியாகும்.சளி,இருமல் போன்ற பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு
2)மிளகு
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் 1/4 தேக்கரண்டி மிளகு,1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 2 பல் பூண்டு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

இந்த பானத்தை சண்ட கொதிக்க வைத்து குடித்து வந்தால் மூக்கடைப்பு பாதிப்பிற்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

அது மட்டுமின்றி தலைவலி,தலையில் நீர்கோர்த்தல்,தலைபாரம்,நுரையீரலில் தேங்கிய சளி அனைத்தும் நீங்கும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி அல்லது சுக்கு
2)தேன்

செய்முறை:-

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.இஞ்சிக்கு பதில் சுக்கு பொடியில் தேன் கலந்து சாப்பிடலாம்.