Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!!

#image_title

நெஞ்சில் ஊசி குத்துவது போன்று சுள்ளுனு இருக்கிறதா? அப்போ இதை ஒரு கிளாஸ் பாருங்கள்!!

நம்மில் பலருக்கு ஒரு சில நேரங்களில் நெஞ்சு பகுதியில் ஊசி குத்துவது போன்ற உணர்வு ஏற்படும். உடனே அது ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ என்று அச்சப்பட வேண்டாம். இவை எதனால் ஏற்படுகிறது என்று தெரியுமா?

காரணம்:-

*பெருங்குடலின் இடது பகுதியில் அதிகப்படியான வாயு தேங்கி இருத்தல்

*மனதில் அதிகப்படியான வலிகள், பதற்றம் ஏற்படுதல்

*அஜீரணக் கோளாறு

*தூக்கமின்மை

நெஞ்சு குத்தல் சரியாக எளிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*தேங்காய் பால் – 1/2 டம்ளர்

*இஞ்சி – 1 துண்டு

*முந்திரி – 2

*உலர் திராட்சை – 2

*ஏலக்காய் – 1

*பூண்டு – 5 பற்கள்

*பால் – 2 தேக்கரண்டி

*மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் 1/4 மூடி தேங்காயை துருவி அதனை அரைத்து ஒரு டம்ளரில் வடிகட்ட வேண்டும்.

அடுத்து இஞ்சி, பூண்டு, முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

ஒரு பவுல் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலில் 1/2 டம்ளர் ஊற்றி கொள்ளவும். பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு, முந்திரி, ஏலக்காய் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்.

இறுதியாக 1 தேக்கரண்டி பால் மற்றும் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.

அந்த பாலில் சேர்த்துள்ள பொருட்களை மென்று விழுங்கி விட்டு அவற்றை குடிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் செய்து குடித்து வந்தோம் என்றால் வயிற்று உப்பசம் மற்றும் நெஞ்சு பகுதியில் குத்தும் உணர்வு சரியாகி விடும்.

Exit mobile version