Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்!

#image_title

இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? எச்சரிக்கை தைராய்டு பிரச்சினை தான்!

தைராய்டு என்பது முன் கழுத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் அமைந்திருக்கக் கூடிய சுரப்பியின் பெயர்தான் தைராய்டு சுரப்பி என்று கூறப்படுகின்றது. உடலுக்கு தேவையான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது அது மட்டுமல்லாமல் உடலில் உள்ள பல்வேறு வகையான உறுப்புகளை கட்டுப்படுத்த கூடியதும் இயக்கத்தை தூண்ட கூறியதுமாக இருக்கிறது.

இந்த தைராய்டு சுரப்பியால் அதிக அளவு பாதிக்கப்பட காரணம் மன அழுத்தம், கவலை, மாறிவரும் உணவு பழக்கம், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் அயோடின் டெபிஸியன்சி என்று சொல்லக்கூடிய அயோடின் பற்றாக்குறை மற்றும் உறுப்புகளில் உள்ள பிற பாதிப்புகள் மற்றும் மரபு ரீதியான காரணங்களால் தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது.

தைராய்டு பிரச்சினையை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம்ஹைபோதைராடிசம் என்பது தைராய்டு சுரப்பிலிருந்து சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாக இருந்தால் அது ஹைப்போ தைராய்டிசம் என்று கூறப்படுகிறது.

ஹைபோதைரைடிசம் இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கும்,உடல் எடையை குறைக்கவே முடியாது இதயத்துடிப்பு குறைவாக இருக்கும். பொதுவாக ஒரு நாளைக்கு இதயத்துடிப்பு 72 நிமிடங்கள் துடிக்க வேண்டும் என்றால் இதயத்துடிப்பின் எண்ணிக்கை குறைவாக இருப்பது. உடல் சோர்வு, முடி உதிர்தல், அதிககுளிர் உணர்வு, ஞாபக மறதி, முறையற்ற மாதவிடாய் பிரச்சனை இந்த தைராய்டு பிரச்சினையினால் ஆண்களை விட பெண்கள் மிகவும் அதிகமாக பாதிப்படைகின்றன. ரத்தத்தில் டி3 மற்றும் டி 4 என்று சொல்லக்கூடிய தைராய்டு ஹார்மோன் குறைவாக இருப்பது டிஎஸ்ஹெச் என்று சொல்லக்கூடிய தைராய்டு ஸ்டெமுலேஷன் ஹார்மோன் அதிகமாக சுரப்பது இதன் அறிகுறியாகும்.

ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பிலிருந்து சுரக்கக்கூடிய ஹார்மோன் அதிக அளவு சுரக்கும் என்றால் இதனை ஹைப்பர் தைராய்டிசம் என்று சொல்வார்கள். இந்த ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள். உடல் எடை குறைவாக இருக்கும் இதய துடிப்பு அதிகமாக இருக்கும் பயம் ,பதட்டம் ,கை கால் நடுக்கம் ,அதிக கோப உணர்வு, மாதவிடாய் பிரச்சனை, தூக்கமின்மை, செரிமான பிரச்சனை ,அடிக்கடி மலம் கழிப்பது ,போன்ற அறிகுறிகள் தோன்றும்.

Exit mobile version