இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.மது புகை பழக்கம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு உண்டாகிறது.நுரையீரல் புற்றுநோய்,வாய் புற்றுநோய்,முதுகு தண்டுவட புற்றுநோய்,கருப்பைவாய் புற்றுநோய்,கல்லீரல் புற்றுநோய்,மார்பக புற்றுநோய்,கணையப் புற்றுநோய் என்று பல வகைகள் இருக்கிறது.
இதில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது கணைய புற்றுநோயால் தான்.இது உயிருக்கு ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாகும்.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திக் கொள்ள முடியும்.ஆனால் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகுவதால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.
கணைய புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியை கண்டறிவது எளிதல்ல.ஆனால் உணவு உட்கொள்ளும் போது உங்களுக்கு நடக்கும் சில மாற்றங்களை வைத்து புற்றுநோய்க்கான அறிகுறிகளை கண்டறிந்துவிடலாம்.
உணவை விழுங்குவதில் சிரமம்,செரிமானக் கோளாறு,உணவு உட்கொண்ட பின்னர் குமட்டல் மற்றும் வாந்தி உணர்வு உள்ளிட்டவைகள் கணைய புற்றுநோய்க்கான அறிகுறிகளாகும்.
கணைய புற்றுநோய் அறிகுறிகள்:
1)உடல் சோர்வு
2)திடீர் எடை இழப்பு
3)இரத்த கட்டிகள்
4)பசியின்மை
5)கடுமையான செரிமானப் பிரச்சனை
6)குடலிறக்கம்
7)அடர் நிற சிறுநீர் வெளியேறுதல்
8)வெளிர் நிற மலம் வெளியேறுதல்
கணைய புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள் அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபி மூலம் எளிதில் அதிலிருந்து மீண்டு விடலாம்.ஆனால் முற்றிய நிலைக்கு சென்றுவிட்டால் உயிர் பிழைப்பது அரிதாகிவிடும்.எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.